மாவுப்பூச்சிகள்: பிளேனோகாக்கஸ் வகைகள்
பிளேனோகாக்கஸ் சிட்ரை
பிளேனோகாக்கஸ் லிலேசின்ஸ்
- இளஞ்செடிகளை பூச்சிகள் விரைவாக தாக்கும்
- செடிகளின் அனைத்துப் பகுதிகளையும் தாக்கும்
- வெண்ணிறப்புள்ளிகள் இலைகளில் தோன்றும்
- சிறு காய்கள் தோன்றும்
- பூச்சியிலிருந்து வெளிவரும் தேன் போன்ற கழிவுப் பொருள் கரும்புகை பூசணம் ஏற்பட வழிவகை செய்கிறது
பூச்சியின் விபரம்:
- ஆண் - சிறியது, இறகுடையது
- பெண் - இறகுற்றது, நீள்வட்டவடிவமுடையது
கட்டுப்படுத்தும் முறை:
- தேவையான அளவு நிழல் தரும் மரங்களை நடவேண்டும்
- சிவப்பு எறும்புகளின் கூண்டுகளை அழிக்கவும்
- எறும்புகளை கட்டுப்படுத்த குவினால்ஃபஸ் தூள் 1.5 சதம் அல்லது மாலத்தியான் 5 சதம் தூள்களை காஃபி மரத்தின் / நிழல் தரும் மரத்தின் அடியில் தூவ வேண்டும்
- தாக்கப்பட்ட இலைப்பகுதியில் குவினால்ஃபஸ் 300 மி.லி தெளிக்கவேண்டும்
- மேலே பயன்படுத்தப்பட்ட ஏதேனும் ஒரு பூச்சிக்கொல்லி கரைசலை வேர்கள் நனையும் படி மண்ணில் ஊற்ற வேண்டும்
- டைமீதோயேட் 3 மி.லி / லிட்டர் கரைசலை இளஞ்செடிகளின் வேருக்கு அடியில் ஊற்றவேண்டும்
|
|