பச்சை செதில் பூச்சி: காக்கஸ் விரிடிஸ்
சேத்ததின் அறிகுறிகள்:
- இலை, தண்டு, பூச்சரம் மற்றும் பழத்திலிருந்து சாற்றை பூச்சிகள் உறிஞ்சி சேதப்படுத்தும்
- இலைமேல் நோக்கி சுருங்கி காணப்படும்
- தேன் போன்ற கழிவுப்பொருள் பூச்சியிலிருந்து வெளிவரும் அப்பொருள் கரும்புகை பூசணம் ஏற்பட வழிவகை செய்கிறது
பூச்சியின் விபரம்:
- இளம் குஞ்சு: வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும்
- பூச்சி: தடையான நீள்வட்டவடிவில் பச்சை நிறத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் அதன் மேற்பரப்பில் காணப்படும்
கட்டுப்படுத்தும் முறை:
- எறும்புகளை கட்டுப்படுத்த மாவுப்பூச்சியில் உள்ளதை இணைக்கவும்
- செதில் பூச்சிகள் இருக்கும் கிளைகளை வெட்ட எடுத்து விடவேண்டும்
- குவினால்ஃபஸ் 120 மி.லி உடன் 200 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்கவும்
|
|