பயிர் பாதுகாப்பு :: காஃபி பயிரைத் தாக்கும் பூச்சிகள் |
பழுப்பு செதில் பூச்சி: செய்சீசியா காஃபியே
சேதத்தின் அறிகுறிகள்:
- இலையின் அடிபகுதியில் இருந்து சாற்றை உறிஞ்சி சேதப்படுத்தும்
- தேன் போன்ற கழிவுபொருள் கரும்புகை பூசணம் ஏற்படுத்துகிறது
பூச்சியின் விபரம்:
- இளம் குஞ்சு: மஞ்சள், பசுமை கலந்த பழுப்பு அல்லது ஊதா நிறத்தில் இருக்கும். தட்டையான, நீள்வட்ட வடிவில் இருக்கும். உடலில் 'H' வடிவ மஞ்சள் நிற அடையாளம் இருக்கும்
- பூச்சி: பெண் செதில் பூச்சி அரைகோள வடிவில் இருக்கும், கடினமான பழுப்பு நிற உறை உடலின் மேலிருக்கும்
கட்டுப்படுத்தும் முறை:
- எறும்புகளை கட்டுப்படுத்த மாவுப்பூச்சியில் உள்ளதை இணைக்கவும்
- செதில் பூச்சிகள் இருக்கும் கிளைகளை வெட்டி எித்து விடவேண்டும்
- குவினால்ஃபஸ் 120 மி.லி உடன் 200 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்கவும்
|
|
|
|