வேர்ப்புழு: ஹோலேட்ரைக்கிய வகை
சேதத்தின் அறிகுறிகள்:
- இலைகள் மஞ்சளாகும்
- வளர்ச்சிக் குன்றிவிடும்
- தாக்கப்பட்ட செடிகள் வாடி காய்ந்துவிடும்
- தாக்கப்பட்ட செடிகளை எளிதாக பிடுங்கி விடலாம்
பூச்சியின் விபரம்:
- வண்டினப்புழு: 'C' வடிவ, அழுக்கடைந்த வெண்மையான நிறத்தில் இருக்கும், தலை கரும்பழுப்பு நிறத்தில் இருக்கும்
- வண்டு: செம்பழுப்பு நிறத்தில் இருக்கும்
கட்டுப்படுத்தும் முறை:
- வேர்புழுக்களின் தாக்கம் அதிகமாக உள்ள இடங்களில் கார்ஃபோபீயூரான் ஃபோரேட் குருனை 10 கிராம் மண்குழியில் இடவேண்டும்
- ஒரு செடிக்கு 20 கிராம் ஃபோரேட் குறுனையை மண்ணில் செடியின் அடியில் இடவேண்டும்
- புழுக்களை சேகரித்து அழிக்கவும்
- விளக்குப்பொறி அமைத்து வண்டுகளை கவர்ந்து அழிக்கலாம் (மார்ச் - ஜீன் மாதங்களில்)
|
|