கம்பளிப் பூச்சி: யூப்டிரோட் வகைகள்
சேதத்தின் அறிகுறிகள்:
- அரேபிகா காஃபியல் சேதம் அதிகமாக இருக்கும் இலைகள் முழுவதும் கடித்து சேதப்படுத்தப்பட்டிருக்கும்
பூச்சியின் விபரம்:
- மஞ்சள் பழுப்புநிற அந்துப்பூச்சி, இறக்கையில் இரண்டு பட்டைகோடுகளும், குறுக்குநெடுக்கு கோடுகளும் இருக்கும்
கட்டுப்படுத்தும் முறை:
- புழுக்களை சேகரித்து அழிக்கலாம்
- ஜனவரி மற்றும் மே மாதங்களில் கூட்டுப்புழுக்களை சேகரித்து எரிக்கவும்
- விளக்குப்பொறி வைத்து அந்துப்பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்
- குவினால்ஃபஸ் 320 மி.லி, ஃபென்னநட்ரோதியான் 240 மி.லி உடண் 100 மி.லி பசை கலந்து 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்
|