பயிர் பாதுகாப்பு :: குளிர்மண்டல காய்கறிகள் பயிரைத் தாக்கும் பூச்சிகள்
வைர முதுகுப் பூச்சி : ப்ளுட்டெல்லா சைலோஸ்டெல்லா

தாக்குதலின் அறிகுறிகள்:

  • இளம் புழுக்கள் இலைகளில் மஞ்சள் நிறத்தில் துளையிட்டு உள்ளிருந்து சாப்பிடும்
  • புழுக்கள் இலைகளின் பச்சையத்தைச் சுரண்டித்தின்று சல்லடை போல் செய்துவிடும் மேலும் இலையின் மேற்பரப்பில் வெண்ணிறத் திட்டுகளை உருவாக்கும்
  • வளர்ந்த புழுக்கள் இலைகளில் துளைகளை ஏற்படுத்தி சேதப்படுத்தும்

பூச்சியின் விபரம்:

  • முட்டை: மிகச்சறிய மஞ்சள் நிற முட்டை. இலையின் மேற்பரப்பில் தனியாகவோ அல்லது குழுக்களாகவோ முட்டையிடும்
  • புழு: வெளிர் மஞ்சள் கலந்த பச்சை நிறப்புழுக்கள்
  • கூட்டுப்புழு: கண்ணாடி போன்ற பட்டுக்கூட்டில் இலைகளில் இருக்கும்.
  • பூச்சி: அந்துப்பூச்சி சாம்பல் நிறம் கலந்த பழுப்பு வண்ணமுடையது. முன் இறக்ககைளில் வெண்மை நிறக்கோடுகள் இருக்கும். இப்பூச்சி, இறக்கைகளை மடித்து அமர்ந்திருக்கும்போது  “வைரம்” போன்ற புள்ளிகள் முதுகுப் புறத்தில் இருப்பதைக் காணலாம்.

கட்டுப்படுத்தும் முறை:

  • அறுவடைக்குபிறகு பண்னைக் கழிவுகள், இலைகள், சேகரித்து அழிக்கவும்.
  • கடுகுப் பயிரை கவர்ச்சிப்பயிராக 25 வரிசை முட்டைக்கோசுக்கு 2 வரிசை கடுகு பயிரிட வேண்டும்.
  • கடுகு பயிருக்கு மட்டும் டைக்குளோர்வாஸ் 0.076% தெளித்து புழுக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும்.
  • இனக்கவர்ச்சிப்பொறி ஹெக்டேருக்கு 12 வைக்கவும்.
  • பயிர் சுழற்சி முறையில் பூசினி வகைக்கொடி,அவரை,தக்காளி மற்றும் தர்ப்பூசினி முதலியவற்றை பயிரிடலாம்
  • மலைப்பிரதேசங்களில் புழு ஒட்டுண்ணியான டைடிக்மா செமிக்ளோசம் ஹெக்டேருக்கு 1,00,000 விடவும்.எமற்றப்பகுதியில் கொடீசியா புளுட்டேல்லே ஹெக்டேருக்கு 20,000 - மூன்று முறை நாற்று நட்ட 20ம் நாளிலிருந்து 10 நாட்கள் இடைவெளியில் விடலாம்.
  • வேப்பம் கொட்டை வடி நீர் 5 சதம் தெள்க்கவும்.
  • உயிரியல் புச்சிக்கொல்லி பெசில்லஸ் துருன்ஜியென்சிஸ் வகை குர்ஸ்டக்கி 2 கிராம்/லிட்டர் தெளிக்கவும்.
  • கார்டாப் ஹைட்ரோகுளோரைடு 0.5 சதம் நட்ட 10, 20 மற்றும் 30 நாட்களுக்கு தெளிக்கவும்.
பூ சேதமடைதல் இலைகளில் பச்சையத்தைச் சுரண்டித்தின்றுதல்

புழு

பூச்சி


புச்சிக்கொல்லி அளவு
அசார்டியாக்டின் 5% வேப்பங்கொட்டைச் சாறு 5.0 மி.லி/ 10லி
லுபெண்சுரான் 5.4% EC 1.2 மி.லி/ லி
ஸ்பினோசெட் 2.5% SC 1.2 மி.லி/ லி
ட்ரைகுளோரோபான் 50% EC 1.0 மி.லி/ லி

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015