பயிர் பாதுகாப்பு :: குளிர்மண்டல காய்கறிகள் பயிரைத் தாக்கும் பூச்சிகள்

முட்டைகோஸ் பச்சைக் காவடிப்புழு: ட்ரைக்கோப்ளுசியாநி
சேதத்தின் அறிகுறிகள்:

  • இளம் புழுக்கள் இலைகளில் நிறைய துளைகள் ஏற்படுத்தியிருக்கும்
  • அதிகமாகத் தாக்கப்பட்ட பயிரில் இலைக்காம்புகளை மட்டுமே காணமுடியும்

 பூச்சியின் விபரம்:

  • முட்டை: பச்சை நிறக்கோடுகளுடன் கூடிய முட்டைகளை தனித்தனியே இலையின் அடிப்பரப்பில் இடும்.
  • புழு: பச்சைநிறத்தில், மங்களான வெள்ளைக்கோடுகளுடனும் காணப்படும்.
  • பூச்சி: அந்துப்பூச்சி பழுப்பு நிறத்தில், குண்டாக இருக்கும். தலை மற்றும் மார்பு பகுதி சாம்பல் நிறத்திலும் வயிற்றுப்பகுதி வெள்ளை நிறத்திலும் இருக்கும். முன்இறக்கை பழுப்பாக வெண்ணிறக் கோடுகளுடன் காணப்படும்.

கட்டுப்படுத்தும் முறைகள்:

  • காவடிப்புழுக்களை கையால் சேகரித்து அழிக்கலாம்
  • ஹெக்டேருக்கு ஒரு விளக்குப்பொறி அமைக்கவும்
  • மாலத்தியான் 0.1 சதம் தெளிக்கவும்

புழு

பூச்சி


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015