புகையிலைப்புழு: ஸ்போடோப்டிரா லிட்ரா
தாக்குதலின் அறிகுறிகள்:
- இலைகளை முழுவதும் சாப்பிட்டு அழிக்கும்.
பூச்சியின் விபரம்:
- முட்டை: தாய்ப்பூச்சி இலையில் சந்தனப் பொட்டு போன்று குவியலாக முட்டையிட்டு உரோமத்தால் மூடும்.
- புழு: இளம்புழுக்கள் கூட்டமாக ஒரே இடத்தில் இருக்கும். புழு கருமை கலந்த பச்சையாகவும், தலைப்பகுதிக்குச் சற்று பின்புறத்தில் இரண்டு கருப்புப் புள்ளிகளுடனும் உடம்பில் திட்டுத் திட்டான கரும்புள்ளிகனும் இருக்கும்.
- முதிர்பூச்சி: பழுப்பு நிறத்தில் இருக்கும். முன்இறக்கைகள் கருப்பு நிறப்பின்னியில் மஞ்சள் நிற குறுக்குக் கோடுகள் இருக்கும். பின்இறக்கைகள் வெண்மை நிறத்துடன் ஓரங்களில் பழுப்பு நிற பட்டையுடன் இருக்கும்.
கட்டுப்படுத்தும் முறை:
- நிலத்தை உழுது மன்னில் புதைந்துள்ள கூட்டுப் புழுக்களை வெளிப்படுத்தி அழிக்கவும்
- வயில் வரப்பு ஓரங்களில் ஆமணக்கை கவர்ச்சிப்பயிராக பயிரிட்டு அதில் காணப்படும் இளம் புழுக்கள் மற்றும் முட்டைக் குவியல்களைச் சேகரித்து அழிக்கவும்
- வயலில் தண்ணீர் தேக்கும் போது உறக்க நிலையில் இருக்கும் புழுவானது அழிக்கப்படுகிறது
- ஒரு ஹெக்டேருக்கு ஒரு விளக்கு பொறி அமைக்கவும்
- இனக்கவர்ச்சிப்பொறி (ஃபெரோடின் எஸ்.எல்.) ஹெக்டேருக்கு 15 வைத்து ஆண் பூச்சிகளை கவர்ந்து அழிக்கவும்
- வளர்ந்த புழுக்களை சேகரித்து அழிக்கவும்
- ஸ்போடோப்டிரா லிட்ரா என்.பி.வைரஸ் 1.5x1012 POBS/ha+ 2.5 கிராம் வெல்லம் மற்றும் 0.1 சதம் பீபால் கலந்து மாலை நேரத்தில் தெளிக்கவும்.
- நச்சுக்கவர்ச்சி உணவு: ஒரு ஹெக்டேருக்கு 5 கிலோ அரிசித் தவிடு + 500 கிராம் வெல்லம் + 500 கிராம் கார்பரில் 50 சத 3லி தண்ணீருடன் கலந்து தெளிக்கவும்
- ஹெக்டேருக்கு குளோர்வைரிஃபாஸ் 20 EC 2 லிட்டர் அல்லது டைகுளோர்வாஸ் 76 WSC 1 லிட்டர் தெளிக்கவும்.
|
|
|
புழு |
பூச்சி |
|