தாக்குதலின் அறிகுறிகள்
- குஞ்சுகளும், வளர்ந்த பூச்சியும் இலைகளின் சாறை உறிஞ்சி உண்ணும்.
- தாக்கப்பட்ட இலைகள் மஞ்சள் நிறமாக மாறி சுருண்டு விடும்.
- தாக்கப்பட்ட பயிர்கள் வளர்ச்சிக் குன்றி காணப்படும்.
- குஞ்சுகள் இலைகளின் மேற்பரப்பில் தேன் போன்ற கழிவு நீர் திரவத்தை சுரக்க செய்வதால், இலைகள் கரும் பூஞ்சானத்தால் கவரப்பட்டு கருமைநிறமாக மாறிவிடும்.
|
பூச்சியின் விபரம்
- குஞ்சுகள் - மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் இருக்கும்.
- அசுவினி - பழுப்பு நிறத்தில் இருக்கும்.
கட்டுப்பாடு (எக்டருக்கு)
- மீதைல் டெமட்டான் 25% EC 500 மிலி/எக்டர்
- டைமீதோயேட் 30 EC 500மிலி/எக்டர்
- எசிடாமிப்ரிட் 20% SP 50 கிராம்/எக்டர்
- அஜாடிராக்டின் 0.03% EC 500 மிலி/எக்டர்
- புயுப்ரோபின்ஜின் 25% SC1000 மிலி/எக்டர்
- கார்போசல்பான் 25%DS 60 கிராம்/ கிலோ விதை
- க்லோர்பைரிபோஸ் 20% EC 1250 மிலி/எக்டர்
- டையபென்தியுரான் 50% WP 600 மிலி/எக்டர்
- பிப்ரோனில் 5% SC 1500-2000 மிலி/எக்டர்
- இமிடாக்லோபிரைட் 70% WG 30-35 கிலோ/ எக்டர்
- இமிடாக்லோபிரைட் 17.8% SL 100 -125 மிலி/எக்டர்
- மாலதியான் 50% EC 1000 மிலி/எக்டர்
- ப்ரோபெனோபோஸ் 50% EC 1000 மிலி/எக்டர்
- தையக்லோபிரைட் 21.7% SC 100-125 மிலி/எக்டர்
- தையமிதாக்சொன் 25% WG 100 கிராம்/எக்டர்
|