பயிர் பாதுகாப்பு :: பருத்திப் பயிரைத் தாக்கும் பூச்சிகள் |
காய் உண்ணும் பூச்சிகள் |
இளஞ்சிகப்பு காய்ப் புழு : பெக்டினோபோரா கொச்பியெல்லா |
தாக்குதலின் அறிகுறிகள்
- முட்டையிலிருந்து வெளிவரும் இளம் புழுக்கள் கப்பைகளையும், மொக்குகளையும் , பூக்களையும் மற்றும் இளம் காய்களையும் தாக்கி அழிக்கும்.
- தாக்கப்பட்ட மொட்டுகள் உதிர்ந்து விடும்.
- தாக்கப்பட்ட மலர்கள் நெருக்கமாய் குவிந்து காணப்படும்.
- வளர்ச்சியடைந்த புழு காயினைத் துளைத்து உள்ளே சென்று உண்டு சேதம் விளைவிக்கும்,விதைகளையும் தாக்கும்.
- இதனால் தாக்கப்பட்ட பஞ்சுகள் கரைபடிந்து காணப்படும்.
பூச்சியின் விபரம்
- புழு இளஞ்சிகப்பு நிறத்திலும், பழுப்பு நிற தலையையும் கொண்டிருக்கும்.
- அந்துப்பூச்சி பழுப்பு நிறத்தில் இருக்கும். இரண்டு இறக்கையிலும் வரிவரியாய் கோடுகளும், புள்ளிகளும் காணப்படும்.
கட்டுப்பாடு
- பயிர் சேதங்களை அகற்றி வயல்களை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.
- நிலத்தை ஆழமாக உழுவதன் மூலம் கூட்டுப்புழுக்களை அழிக்கலாம்.
- சரியான பருவத்தில் விதைப்பு செய்வதன்மூலம் இப்பூச்சியின் தாக்குதலைத் தவிர்க்கலாம்.
- தண்ணீர் தேங்குதலைத் தவிர்க்க வேண்டும்.
- இப்பூச்சியின் தாக்குதல் பொருளாதார சேத நிலையைத் தாண்டும் பொழுது எக்டர்க்கு ட்ரைசோபாஸ் 2.5 லிட்டர் அல்லது எண்டோசல்பான் 2 லிட்டர் மருந்தைத் தெளித்து இளஞ்சிகப்பு புழுவின் தாக்குதலைக் குறைக்கலாம்.
|
|
புழு |
|
|
அந்துப்பூச்சி |
|
|
|