தாக்குதலின் அறிகுறிகள்
- நில மட்டத்திற்கு சற்று மேலே தாக்கப்பட்டத்அடித்தண்டுகளில் முண்டுகள் போன்ற வீக்கம் காணப்படும்.
- இளம் பயிர் வாடிக் காய்ந்துவிடும்
பூச்சியின் விபரம்
- புழு - வெள்ளை நிறமாக, கால்கள் இல்லாமல் காணப்படும்.
- வண்டு - சிறியதாக, கருமை நிறத்தில் இருக்கும். உடலின் மேற்பரப்பில் வெள்ளை நிறத்திட்டுகள் காணப்படும்.
கட்டுப்பாடு : பொருளாதார சேதார நிலை :10 சத சேதம்
- எக்டருக்கு 30 கிலோ கார்போபியுரான் மருந்தினை மண்ணில் தூவ வேண்டும்.
- நடவு செய்த 20 நாட்கள் கழித்து தூரைச் சுற்றி மண் அணைக்க வேண்டும்.
- அடி உரமாக தொழு எருவை எக்டருக்கு 25 டன் அல்லது வேப்பம் புண்ணாக்கு 250 கிலோவை தூவ வேண்டும்.
- குளோர்பைரிஃபாஸ் 20EC (10மிலி/ 1 கிலோ விதைக்கு) மருந்து கலந்து விதைநேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.
- குளோர்பைரிஃபாஸ் மருந்து (2.5 மிலி/ லிட்டர்) கலந்து விதைத்த 15 மற்றும் 30 ஆம் தூரைச் சுற்றி ஊற்ற வேண்டும்.
|