அறிகுறிகள்
- பாதிக்கப்பட்ட இளஞ்செடியின் விதையிலைகள் மஞ்சளாகவும் பழுப்பாகவும் மாறுவதுடன் இலைக்காம்புகளின் மீது பழுப்பு வளையம் காணப்படும்.
- நாளடைவில் இளஞ்செடிகள் காய்ந்துவிடும். வளர்ந்த செடியில் நோய் தொற்றினால், அடிப்பாகத்திலுள்ள முதிர்ந்த இலைகள் ஆரம்பத்தில் மஞ்சளாக மாறி, பின் வாடி உதிர்ந்து விடும்.
- தண்டின் அடிப்பகுதி கருமையாகவும், உரித்துப் பார்த்தால் கருப்பு அல்லது பழுப்பு நிற கோடுகள் காணப்படும்.
கட்டுப்பாடு
- அமிலம் மூலம் பஞ்சு நீக்கிய விதைகளை, கார்பாக்சின் அல்லது கார்பென்டசிம் 4 கிராம் / கிலோ கொண்டு விதை நேர்த்தி செய்யவும்.
- ஜீன் – ஜீலையில், கோடை உழவுக்குப் பின் அறுவடை செய்த தாவரக்குப்பைகளை அகற்றி தீயிடவும்.
- பொட்டாசியம் உரத்தின் அளவை அதிகரிக்கவும்.
- அதிகப்படியான தொழுவுரம் 100 டன் / எக்டர் இடவும்.
- 0.05 % பெனோமைல் (அ) 0.1 % கார்பென்டசிம் கொண்டு செடிகளின் தூர்களில் ஊற்றி மண்ணை நனைக்கவும்.
|
|
|
தண்டின் அடிப்பகுதியில் பழுப்பு நிறக்கோடுகள் |
மஞ்சள் நிற இலைகள் |
|