பயிர் பாதுகாப்பு :: பருத்தி பயிரைத் தாக்கும் நோய்கள்

வெர்ட்டிசிலியம் வாடல் நோய் : வெர்ட்டிசிலியம் டாலியே

அறிகுறிகள்
  • பொதுவாக, பயிர் பூத்துக் காய் பிடிக்கும் தருணத்தில் மிகுதியாக தோன்றும்.
  • இலை நரம்புகளின் இடைப்பட்ட பகுதி வெளுத்து மஞ்சளாக காணப்படும்.  இலைப் பாகத்தில் வெளி ஒரப்பகுதிகளும் காய்ந்துவிடும்.
  • நரம்புகளின் ஒரங்களில் மட்டும் பசுமை நிறமும் மற்ற பகுதிகளில் காய்ந்த பழுப்பு நிறமும் கொண்ட குவிந்த தோற்றம் “புலியின் கால்தட வரி” போன்று காணப்படும்.
  • செடியின் மேல் பட்டையை நீக்கி (அ) பிளந்து பார்த்தால் இளஞ்சிவப்பு நிறக்கோடுகள் காணப்படும்.

மேலாண்மை

  • நெல் (அ) குதிரைமசால் (அ) செவ்வந்திபூ கொண்டு 2-3 வருடங்களுக்கு பயிர் சுழற்சி செய்யவும்.
  • அமிலம் மூலம் பஞ்சு நீக்கிய விதைகளை, கார்பாக்சின் அல்லது கார்பென்டசிம் 4 கிராம்  / கிலோ கொண்டு விதை நேர்த்தி செய்யவும்.
  • ஜீன் – ஜீலையில், கோடை உழவுக்குப் பின் அறுவடை செய்த தாவரக்குப்பைகளை அகற்றி தீயிடவும்.
  • பொட்டாசியம் உரத்தின் அளவை அதிகரிக்கவும்.
  • அதிகப்படியான தொழுவுரம் 100 டன் / எக்டர் இடவும்.
  • 0.05 % பெனோமைல் (அ) 0.1 % கார்பென்டசிம் கொண்டு செடிகளின் தூர்களில் ஊற்றி மண்ணை நனைக்கவும்.

 

 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2008-2024