அறிகுறிகள்
- முளையிடும் நாற்றுக்களின், விதையிலை கீழ்த்தண்டில் கருப்பு புண்கள், தண்டின் பட்டை இடை நீக்கமடைந்து நாற்றுகள் இறந்துவிடும்.
- தண்டின் அடிப்பகுதியில் பட்டை நார் நாராக உரிந்துவிடும்.
- வேர்பகுதி முழுவதும் சிதைந்து விடும். செடியை பிடுங்கினால் எளிதில் வந்துவிடும்
மேலாண்மை
- ட்ரைக்கோடெர்மாவிரிடி 4 கிராம் / கிலோ (அ) சூடோமோனாஸ்ஃபுளுரசன்ஸ் 10 கிராம் கிலோ கொண்டு விதை நேர்த்தி செய்யவும்.
- கார்பாக்சின் (அ) திரம் 5 கிராம் (அ) கார்பென்டசிம் 2 கிராம் / கிலோ விதை நேர்த்தி செய்யவும்.
- 0.05% பெனோமைல் (அ) 0.1% கார்பென்டசிம் கொண்டு செடிகளின் தூர்களில் ஊற்றி மண்ணை நனைக்கவும்.
- தொழுவுரம் 10 டன் / எக்டர் (அ) வேப்பம் புண்ணாக்கு 2.5 டன் / எக்டர் இடவும்.
- ஆரம்ப விதைப்பு (ஏப்ரல் முதல் வாரம்) (அ) தாமத விதைப்பு (ஜீன் கடைசி வாரம்) விதைக்கும் நேரத்தை மாற்றுவதன் மூலம் செடியை அதிக மண் வெப்பநிலையிலிருந்து பாதுகாக்கலாம்.
- மண் வெப்பநிலையை குறைக்க, சோளம் மற்றும் நரிப்பயறுவை ஊடுபயிராக நடவும்.
|
|
|
வேரழுகல் |
தண்டு நார் நாராக அறிதல் |
|