சாம்பல் (அ) தயிர்ப்புள்ளி நோய் : ராமுல்லேரியா ஏரியோலா
அறிகுறிகள்
- இலையின் அடிப்புறத்தில், ஒழுங்கற்ற, கசியும் புண்களுடன் சாம்பல் நிற புள்ளிகள் இலையின் மேற்பரப்பில் காணப்படும்.
- நோய் தீவிரமடைந்த நிலையில் சாம்பல் நிற நுண்துகள்கள் இலையின் மேற்பரப்பிலும் காணப்படும்.
- பாதிக்கப்பட்ட இலைகள் நுணியிலிருந்து உள்நோக்கி காயத்தொடங்கும்; பின் மஞ்சள் நிறமாகி, இளம் இலைகள் உதிர்ந்துவிடும்.
- நோய் எதிர்ப்புத்திறன் கொண்ட வகைகள் சுஜாதா மற்றும் வரலட்சுமி போன்றவைகளை பயன்படுத்தவும்
மேலாண்மை
- தாவரக்குப்பைகளை அகற்றி தீயிடவும்
- தானாக வளர்கின்ற பருத்தி செடிகளை அகற்றவும்
- அதிகப்படியான நைட்ரஜன் உரங்களை தவிர்க்கவும்.
- மண்ணின் நிலை மற்றும் தாவர வகைகளைப் பொருத்து வயலில் இடைவெளியை சரிசெய்யவும்.
- கார்பென்டசிம் 250 கிராம் (அ) வெட்டபுலள் சல்பர் 1.25 – 2.0 கிலோ / எக்டர், வாரத்திற்கு ஒருமுறை தெளிக்கவும்.
|
|
|
வெள்ளை சாம்பல் நிற புள்ளிகள் |
|