பயிர் பாதுகாப்பு :: பருத்தி பயிரைத் தாக்கும் நோய்கள் |
காயழுகல் நோய்
- ஃபியுசேரியம் மொனிலிஃபார்மி, கோலிட்ரோட்ரைக்கம்கேப்சிஸி, அஸ்பெர்ஜில்லஸ்ஃபிலேவஸ், அ. நைகர், ரைஜோபஸ்நைக்ரிகன்ஸ், போட்ரிடிப்லோடியா வகை போன்ற நோய்க்காரணிகள் காய் அழுகலுடன் தொடர்பு கொண்டுள்ளன.
அறிகுறிகள்
- காய் முழுவதும் கருப்பு (அ) பழுப்பு நிற புள்ளிகள் காணப்படும்.
- அழுகல், வெளியிலோ (அ) உட்பகுதியிலோ காணப்படும்.
- காய், வெடிக்காமல், இளம்பருவத்திலேயே உதிர்ந்துவிடும்.
மேலாண்மை
- போதுமான இடைவெளி விடவும்.
- பரிந்துரைக்கப்பட்ட உர அளவை பயன்படுத்தவும்.
- கார்பென்டசிம் 2 கிலோ (அ) மான்கோசெப் 2 கிலோ / எக்டர், 45 – ம் நாள் முதல் 15 நாட்களுக்கு ஒருமுறை தெளிக்கவும்.
|
|
|