அறிகுறிகள்
- விதையிலைகளில் நீர் ஊறிய சிறிய புள்ளிகள், வட்ட வடிவமாக (அ) ஒழுங்கற்றதாக ஒன்றோடொன்று இணைந்து காணப்படும். பின் காய்ந்து உதிர்ந்துவிடும். இளஞ்செடிகளில் புதிதாக தோன்றும் இலைகளும் தாக்கப்பட்டு காய்ந்து விடும். இது “நாற்று கருகல்” எனப்படும்.
- இலைகளின் அடிப்பாகத்தில் நீர் ஊறிய சிறுபுள்ளிகள் பழுப்பு நிறத்தில் பின் கரு நிறமாக மாறி, மேலும் விரிவடையாமல் சிறு சிறு நரம்புகளுக்கிடையில் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதால் கோண வடிவத்தை கொண்டிருக்கும். நாளடைவில் மேற்புறத்திலும் புள்ளிகளை காணலாம் (கோணப்புள்ளி).
- நடுநரம்பு, கிளை நரம்புகள் இவற்றின் இருபுறங்களிலும் நீர்க் கசிவு தோன்றி நாளடைவில் கருநிறமாக மாறிவிடும் (நரம்பு கருத்தல்)
- தண்டு மற்றும் கிளைகளில் கருப்பு நிற காயங்கள் காணப்படும். இளம் இலைகள் உதிர்ந்துவிடும் (கருங்கிளை)
- இது காய்களையும் பாதிக்கிறது (காய்கல்)
மேலாண்மை
- அடர்த்தியான சல்பியூரிக் அமிலம் 100 மி.லி / கிலோ விதை கொண்டு பஞ்சு நீக்கம் செய்யவும்.
- பஞ்சு நீக்கிய விதைகளை கார்பாக்சிம் (அ) ஆக்சிகார்பாக்சின் 2 கிராம் / கிலோ கொண்டு விதை நேர்த்தி (அ) விதைகளை 1000பி.பி.எம் ஸ்ரெப்டோமைசின்சல்பேட்டைஊற வைக்கவும்.
- தாவரக் குப்பைகளை அகற்றவும்.
- தானாக வளர்ந்த பருத்தி செடி மற்றும் களைகளை நீக்கவும்.
|
|
|
கோணப்புள்ளி |
நரம்பு கருத்தல் |
|
காய் அழுகல் |
|