பச்சைப் பூசணம்: பெனிசீலியம் இட்டாலிக்கம்
அறிகுறிகள்:
- இந்நோய் பழங்களை சேமித்து வைக்கும் பொழுது உருவாகும்
- பாதிக்கப்பட்ட பழங்களில் நீர்கோத்து காணப்படும்
- நீர்மப்புள்ளிகள் அதிகமாகி முழு பழங்களுமே அழுகி கெட்ட நாற்றத்தைப் பரப்பும்
- பச்சை பூசணத்தின் வளர்ச்சி பழங்களின் மேற்பரப்பில் காணப்படும்
- பூசணத்தின் நோய்க்காரணிகள் காற்று வழியாகப் பரவும்
- இது பழத்தின் கிழ்ப்பகுதி அல்லது பட்டைத்துளை வழியாக நுழையும். எப்பொழுதும் இதன் வழியாகவே நுழையும்
|
|
நீர்கோத்த திசுக்கள் |
அதிகமாகும் நீர்மப்புள்ளிகள் |
கட்டுப்பாடு:
- பெனோமில், ட்ரையோஃபனேட் - மெத்தில்
- 2% நிறம் நீக்க உப்பு - 5 நிமிடங்கள் மற்றும் 0.2% பில்ட் 406 - 10 நிமிடங்கள்
- 2-4 செல்சியசில் சேமித்து வைக்கவும்
- 0.1% டி.பி.ஜெட் மற்றும் 0-12 வேக்காலுடன் சேர்த்து குளிர்வித்தல் வேண்டும். (சுப்பிரமணியன் இட்.ஆல், 1973)
- சேமிக்கும் முன்பே 2-3 நிமிடங்கள் டி.பி.ஜெட் (500 பி.பி.எம்) -ஐ முக்கி வைக்கவும்
- 4% போரிக் அமிலம் மற்றும் இமடாசில்
Image source: http://archive.bio.ed.ac.uk/jdeacon/microbes/applerot.htm |