பயிர் பாதுகாப்பு :: குளோரிலில்லி பயிரைத் தாக்கும் பூச்சிகள் |
லில்லி புழு: பாலிடெல்லா கிலோரியோசா
அறிகுறிகள்:
- ஆரம்ப பருவ நிலை புழுக்கள் இலைகளின் பச்சையத்தை சுரண்டி உண்ணும்
- கடைசி பருவ நிலை புழுக்கள் செடியின் கடின தண்டுப்பகுதியை மட்டும் விட்டுவிட்டு மற்றப் பகுதிகளை அதிவேகமாக உண்ணும்
- செடி முழுவதும் அழித்துவிடும்
பூச்சியின் விபரம்:
- முட்டை – சிறிய அளவில் வெள்ளை நிறத்தில் காணப்படும்
- புழு – அடர் பழுப்பு நிறத் தலையுடன், கருப்பு நிற வயிறுடன் காணப்படும்
- பூச்சி – ஊதா நிறத்தில், வெள்ளை நிறப்புள்ளிகள் முன்னிறக்கைகளில் காணப்படும்
கட்டுப்பாடு:
- வேப்பஎண்ணெய் 0.5% (அ) வேப்பங்கொட்டைச் சாறு 5% தெளிக்க வேண்டும்
|
|
|