சிவப்பு கம்பளிப்புழு: அம்சாக்டா லாக்டீனியா
அறிகுறிகள்:
- இலைகளை புழுக்கள் அதிவேகமாக உண்ணும்
- ஆடு மாடுகள் புல் மேய்ந்தது போன்று காணப்படும்
- பருவ மழைக்குப் பிறகு அந்துப் பூச்சிகள் வெளிவரும்
கட்டுப்பாடு:
- புழுக்களை கைகளால் சேகரித்து, அழிக்க வேண்டும்
- முட்டைக் கூட்டத்தை சேகரிக்க வேண்டும்
- கோடை உழவு செய்ய வேண்டும்
- சேகரித்த புழுக்கள், முட்டைகளை எரிக்க வேண்டும்
- 2.5 கிலோ / ஹெக் கார்பைரிலை 625 லிட்டர் நீரில் கரைத்து தெளிக்க வேண்டும்
- நச்சுப் பொறி வைக்க வேண்டும்
|
|