பயிர் பாதுகாப்பு :: குளோரிலில்லி பயிரைத் தாக்கும் பூச்சிகள்

காவடிப் புழு: ப்ளுசியா சிக்னேட்டா

அறிகுறிகள்:

  • புழுக்கள் இலைகளை உண்ணும்
  • இலைகள் உதிரும்

பூச்சியின விபரம்:

  • புழு – பச்சை நிறத்தில், உடல் முழுவதும் பழுப்பு நிறப் புள்ளிகளுடன் காணப்படும்
  • பூச்சி – நடுத்தர அளவில், பழுப்பு நிறத்தில் முன்னிறக்கைகளில் வெள்ளை நிறப் புள்ளிகளுடன் காணப்படும்

கட்டுப்பாடு:

  • தாக்கப்பட்ட பயிர் பகுதிகளை சேகரித்து அழிக்க வேண்டும்
  • புழுக்களை கையால் எடுத்து, அழிக்க வேண்டும்
  • வேப்பங் கொட்டை சாறு 5% (அ) வேப்ப எண்ணெய் 0.5% தெளிக்க வேண்டும்

 



முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015