உயிரியல் முறைக்கட்டுப்பாடு :: பேரளவு உற்பத்தி செய்தல் |
ஒட்டுண்ணியை பெருமளவில் உற்பத்தி செய்தல் |
பிரகான் ஹெபெடர் - பேரளவு உற்பத்தி |
- புற புழுப்பருவ ஓட்டுண்ணி
- இதில் 2 துணை வகைகள் உள்ளன. ஒன்று வயல்வெளி மற்றொன்று சேமிப்புக்கிடங்கை தாக்கும்.
- கருத்த்தலைப் புழு –முக்கிய ஓம்புயிரி
- ஓட்டுண்ணி வாழ்க்கையை ஆண்டு முழுவதும் காணலாம்.
உற்பத்தி செயல்முறை
- பிரகான் ஹெபெடர் – யை பரவலான வெப்பநிலை மற்றும் மாறுபடும் ஈர்ப்பதநிலையில் கோர்சைரா புழுவில் வளர்க்கலாம்.
- முட்டையிலிருந்து புதிதாக வெளியேறும் புழுக்களை மாதிரி குழலில் (8x2.5 cm) வைக்கவும்.
- இதே அளவு 5 – ம் தோலுரிப்பி இடைப்பருவம் கோர்சைரா புழுக்களை பிரகான் முட்டையிட வழங்கப்படுகிறது மற்றும் ஒட்டுண்ணுதலடைந்த புழுக்களை குழல்களில் இருந்து தினமும் நீக்கப்பட்டு தனித்தனியாக பராமரிக்கவும்.
- ஓட்டுண்ணிகளுக்கு 50% தேன் துளிகளை உணவாக மெழுகு பூசப்பட்ட காகித கீற்றுகளில் வழங்கவும்.
பருவம் |
நாட்கள் |
முட்டை |
1-2 |
புழு |
2-4 |
கூட்டுப்புழு |
3-7 |
மொத்த வளர்ச்சி காலம் |
7-12 |
- ஓம்புயிரி புழு, செயலிழக்க தொடங்கிய பின் பெண் பிரகான் 2-5 நாட்களுக்கு முட்டையிடும்.
- செயலிழந்த புழுக்கள் ( முட்டை பெறாத புழுக்கள்) 3-5 நாட்களில் இறந்துவிடும்.
- முட்டைகள் தனியாகவோ (அ) 2 – 8 முட்டைகள் சேர்ந்த குழுவாகவோ இடும்.
- 1 ஓம்புயிரி புழு 119 முட்டைகள் மற்றும் 9 ஓட்டுண்ணி புழுக்களை ஏற்கும்.
- ஒரு வளமான பெண் அந்துப்பூச்சி 20 – 63 நாட்கள் வரை வாழும்.
- கோர்சைரா புழுவில், பிரகானின் வளர்ச்சிகாலம் 7- 10 நாட்கள்.
- 13 (5-22) நாட்கள் முட்டையிடும்.
முன்னெச்சரிக்கை :
- விரயத்தை தவிர்க்க உபரி ஊட்டுண்ணிகளை குளிர்சாதன பெட்டியில் ஒரு மாதம் பட்டுக்கூடு நிலையில் சேமிக்கவும்.
- பட்டுக் கூட்டிலிருந்து அந்துப்பூச்சி வெளியேறுவதற்காக பட்டுக்கூட்டை, ஒரு தெளிவான பிளாஸ்டிக் ஜாடியில் (19 x 9 செ.மீ ) வைத்து உலர் திராட்சைகளை உணவாக கொடுக்கவும்.
- சிற்றுண்ணி (பெடிக்குலாய்டிஸ் வென்ட்ரிகோசஸ் ) தாக்கப்பட்ட வளர்ப்பு ஓம்புயிரி பூச்சியை தனிமைப்படுத்தவும்.
|
|