உயிரியல் முறைக்கட்டுப்பாடு :: பேரளவு உற்பத்தி செய்தல் |
நச்சுயிரியை பெருமளவில் உற்பத்தி செய்தல் |
ஸ்போடோப்டிரா லிட்யூரா விலிருந்து NPV – பேரளவு உற்பத்தி : (அ) நியூக்ளியர் பாலி ஹெட்டி ரோஸிஸ் வைரஸ் ஸ்போடோப்டிரா லிட்யூரா |
|
(SlNPV) பேரளவு உற்பத்தி
- ஸ்போடோப்டிரா புழுவின் 5 – ம் இடைப்பருவ நிலையில் அதிகபட்ச NPV தயாரிக்கப்படுகிறது.
- புழுக்களை, 5 மிலி கண்ணாடி குப்பிக்குள் வளர்த்து, 5 – ம் எடை பருவத்தை அடைந்ததும் வைரஸ் உற்பத்திக்கு பயன் படுத்தப்படுகிறது.
- 1 x 108 POB வைரஸ் கொண்ட 10 மிலி கலவையை, கண்ணாடி குபியில் உள்ள உணவின் மேற்பரப்பில் பரப்பிவிடவும்.
- 15 நிமிடத்திற்குப் பிறகு தனித்தனி புழுவாக கண்ணாடி குப்பியில் இடமாற்றம் செய்து 25℃ வெப்பநிலையில் 10 நாட்களுக்கு வைக்கவும்.
- 5 நாட்களுக்குப் பின் புழுக்கள் இறக்கத் தொடங்கும். இறந்த புழுக்களை 500 மிமி பிளாஸ்டிக் கலனில் வைத்து உரைகலனில் சேமிக்கவும்.
- ஸ்போடோப்டிரா லிட்யூரா மற்றும் ஹெலிக்கோவெர்பா ஆர்மிஜெராக்கும் ஒரே மாதிரியான செயலாக்க முறையாகும்.
|
|