இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் தானியங்களில் 20 முதல் 30 விழுக்காடு பூச்சி மற்றும் நோய் தாக்குதலால் பாதிக்கப்படுகின்றன. பருத்தி, கரும்பு மற்றும் நெற்பயிரில் பூச்சிகளின் தாக்குதல் அதிகமாகக் காணப்படுகின்றன. அதனால் மிக அதிகமாக பூச்சி மருந்துகள் உபயோகப்படுத்தப் படுகின்றன. ஆந்திர மாநிலத்தில் 20 விழுக்காடு, பஞ்சாப் மாநிலத்தில் 10 விழுக்காடும், தமிழ்நாட்டில் 9 விழுக்காடும், கர்நாடகம் மற்றும் குஜராத் மாநிலங்களில் முறையே 6 விழுக்காடும் பூச்சி மற்றும் நோய்க் கொல்லிகளில் பயன்படுத்தப்படுகின்றன.
அதிக அளவில் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதால் உற்பத்தியாள பயிர்கள் நச்சுத்தன்மை கொண்டதாகவும், உடல்நலத்துக்குத் தீங்கு விளைவிப்பனவாகவும் மாறுகின்றன. மேலும் பூச்சிக்கொல்லிகளால் பெரும் அளவிலான நன்மை செய்யும் பூச்சிகள் அழிக்கப்படுகின்றன. எனவே வேதியியல் முறைக்குப் பதிலாக இயற்கை வழியிலான உயிர்க் கட்டுப்பாட்டுக் காரணிகளைப் பயன்படுத்துவதன் மூலமாக நிலைப்புள்ள வேளாண்மை மேற்கொண்டு நச்சுத் தன்மையற்ற பயிர்களைச் சாகுபடி செய்யலாம்.
உயிர்க் கட்டுப்பாட்டு முறை என்பது இயற்கைக் காரணிகளான இரை விழுங்கிகள், ஒட்டுண்ணிகள் மற்றும் என் பி. வி. என்ற வைரஸ் நச்சுயிர்கள் மூலமாகப் பூச்சிகளையும், நோய்களையும் கட்டுப்படுத்துதலாகும்.
|