பயிர் பாதுகாப்பு :: புதினா பயிரைத் தாக்கும் நோய்கள்
புதினா
புதினாவில் மென்த்தால் (அநவோடிட) என்னும் மருந்துப் பொருள் உள்ளது. புதினா இலைகளிலிருந்து நீராவி வடிப்பு மூலம் எண்ணெய் பிரித்தெடுக்கப் பட்டு மென்த்தால் எனும் மருந்துப் பொருள் தயார்  செய்யப்படுகிறது. இது உணவுப் பொருள்களுக்கு மணமூட்டுவதற்காகப் பயன்படுகிறது. தொண்டைக் கரகரப்பை உடனடியாகச் சரி செய்து தொண்டைக்கு இதமான தன்மையை ஏற்படுத்தும்.
வாடல் நோய்
இந்நோய் இளம்  நாற்றுகளைத் தாக்கக்கூடும். இந் நோயானது ஆகஸ்டு – செப்டம்பர் மாதங்களில் காற்றின் வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் அதிகரிக்கும் போது அதிகமிருக்கும்.  இதைத் தடுக்க விதைப்பதற்கு முன் விதைகளை விதை நேர்த்தி  செய்ய வேண்டும். ஒரு கிலோ விதையை இரண்டு கிராம் பெவிஸ்டின் மருந்தில் கலந்து, பின்  விதைக்க வேண்டும். பயிர் சுழற்சி மூலம் வாடல் நோய் வராமல் தடுக்கலாம்.
இலை கருகல் நோய்
இலைப்புள்ளி,  இலைக் கருகல் நோய் ஆகியவை இலைகளைச் சேதப்படுத்தும். இலைப்புள்ளி நோய் தாக்குவதால், முதிர்ச்சியாகும் இலைகள் பெருமளவில் உதிர்ந்து மகசூலைப் பாதிக்கும். இதனைக் கட்டுப்படுத்த  மான்கோசெப் 0.2 சதம் (ஒரு லிட்டருக்கு 2 கிராம்) மருந்தை15 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்க வேண்டும்.
இலைப்புள்ளி நோய்
இலைப்புள்ளி நோய் செடிகளுக்கு அதிக சேதத்தை விளைவிக்கும். குறிப்பாக, மழைக்காலங்களில் இந்நோய் தென்படும். இதனைக் கட்டுப்படுத்த  மான்கோசெப் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். அதிக மழை உள்ள இடங்களில் வேரழுகல் நோய் தென்படலாம். நிலத்தில் வடிகால் வசதியை ஏற்படுத்தினால் இந்நோய் வராமல் தடுக்கலாம்.

Updated on Feb, 2014
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2014