1.நுனி அல்லது இலைத்துரு நோய் : பக்சினியா கொரோனேட்டா வகை அவின்னே
|
அறிகுறிகள்
- பனி அதிகமாகும் காலங்களில் இந்த நோய் தோன்றும். மாற்று ஓம்புயிரி – ரேம்னஸ் வகைகள்.
- மிகச்சிறிய, வட்ட வடிவமான மஞ்சள் கலந்த சிவப்பு நிற மேல் எழுந்த புள்ளிகள் இலைப்பரப்பு மற்றும் இலையுறையின் ஏதாவது ஒரு பக்கம் தோன்றும்.
- இந்த மேலே எழுந்த புள்ளிகளில் உள்ள மஞ்சள் கலந்த சிவப்பு நிற வித்துக்கள் மூலம் பரவும்.
|
கட்டுப்பாடு
- நோய் எதிர்ப்பு சக்தியுள்ள இரகங்களைப் பயிரிடுதல்.
- மேன்கோசெப் 1 கிலோ/ ஹெக்டர் என்ற அளவில் தெளிக்கவேண்டும்.
மேலே
2.கரிப்பூட்டை நோய் : உஸ்டிலாகோ அவின்னே, உஸ்டிலாகோ கொல்லேரி
அறிகுறிகள்:
- தளர்ந்த கரிப்பூட்டை (உஸ்டிலாகோ அவின்னே) மற்றும் மூடிய கரிப்பூட்டை (உஸ்டிலாகோ கொல்லேரி) ஆகிய இரண்டும் தான் பரவலாக ஓட்ஸ் பயிரில் நோய் ஏற்படுத்துபவை.
- உதிரி கரிப்பூட்டையில் உள்ள வித்துக்கள் அனைத்து விதைகளையும் அழிக்கும்.
- மழை மற்றும் காற்றினால் கீழே விழும் பயிர்களில் இந்த நோய் வித்துக்கள் தோன்றும்.
- வயலில் தெள்ளத் தெளிவாக நோய் தாக்கப்பட்ட கதிர்கள் வெளியே தெரியும்.
கட்டுப்பாடு
- கேப்டான் 2 கிராம் /கிலோ என்ற அளவில் விதை நேர்த்தி செய்தல்.
மேலே
3.இலைக் கருகல், விக்டோரியா கருகல், குத்து அழுகல் நோய்
|
அறிகுறிகள்:
- மூன்ற வகை பூஞ்சைகள் ஓட்ஸ் பயிரில் நோயை ஏற்படுத்தும்.
- இலைகளில் இலைக் கருகல் தோன்றும்.
- முதலில் இளம் மஞ்சள் நிறத்தில் தோன்றி பின் சிவப்பிலிருந்து பழுப்புநிறமாக தோன்றும்.
- விக்டோரியா கருகல் என்பது நாற்று கருகலாகும். நாற்றுக்கள் முளைக்க ஆரம்பித்தவுடனே சிலசமயங்களில் மடிந்து விடும்.
- பயிர்கள் குட்டை வளர்ச்சியுடன், இலைகள் சிவப்பு நிறமாக மாறும். அதே சமயத்தில் பயிர்கள் மடிந்து விடும்.
- குத்து அழுகல் என்பது அடித்தண்டு மற்றும் வேர் அழுகலாகும்.
|
கட்டுப்பாடு:
- விதை நேர்த்தி, பயிர் சுழற்சியின் மூலம் நோயைக் கட்டுப்படுத்தலாம்
- திரம் 4 கிராம்/கிலோ என்ற அளவில் விதை நேர்த்தி செய்தல்.
மேலே
4. செப்டோரியா இலை கருகல் : செப்டோரியா வகைகள்
|
அறிகுறிகள்:
- சாம்பல் முதல் அடர் பழுப்பு நிற இலைக் கருகல் தோன்றும்.
- தண்டில் கருப்பு புள்ளிகள் தோன்றுவதால் பயிர்கள் மடியும்.
- தானியங்கள் சில சமயங்களில் தாக்கப்பட்ட கருப்பு நிறமாக மாறும்
|
கட்டுப்பாடு:
- பயிர் சுழற்சி, பயிர் குப்பைகளை புதைக்க வேண்டும்.
மேலே
5.ஹேலோ கருகல் : சூடோமோனஸ் கொரானோபேசியன்ஸ்
|
அறிகுறிகள்:
- இலை பரப்பில் நீள் வட்ட வடிவ நீரில் அமிழிந்த புள்ளிகள் லேசான பழுப்பு நிறத்தில் தோன்றும்.
- பழுப்பு நிற புள்ளியைச் சுற்றி லேசான மஞ்சள் நிற வளையம் தோன்றும்.
|
கட்டுப்பாடு:
- விதைநேர்த்தி, பயிர் குப்பைகளை அழித்தல், பயிர் சுழற்சி.
மேலே
ஆதாரம்:
www.fao.org/docrop/008
|