நோய் எதிர்ப்பு தன்மையுடைய மரபணுக்கள்
பாக்டீரியல் இலைக்கருகல் நோயைக்கட்டுப்படுத்த வேதியியல் மருந்து இல்லை. எனவே நோய் எதிர்ப்புடைய ரகங்களைப் பயிரிடுவதே இந்நோயைக் கட்டுப்படுத்த ஒரே வழி. நோய் எதிர்ப்புத்தன்மையுடைய பல வகையான நெல் ரகங்களிலிருந்து 35க்கும் அதிகமான (Xa1, Xa2…….. Xa38) நோய் எதிர்ப்புத்தன்மையை உருவாக்கக் கூடிய மரபணுக்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.
உயிரியல் மூலக்கூறு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நோய் எதிர்ப்புத்தன்மையானது மரபணு மூலக்கூறு குறியீடு தேர்வு(DNA marker Assisted Selection) மூலம் நோய் எதிர்ப்புத் தன்மையுடைய ரகத்திலிருந்து அதிக விளைச்சல் தரக்கூடிய நோய் எதிர்ப்புத்திறனற்ற ரகத்திற்கு மாற்றப்படுகிறது.
இரண்டு அல்லது மூன்று நோய் எதிர்ப்புத்தன்மையுடைய மரபணுக்களை ஒன்றாக இணைத்து இலைக்கருகல் நோயை உருவாக்கக்கூடிய அனைத்து வகையான பாக்டீரியா நுண்ணுயிரிக்கு எதிர்ப்புத்தன்மை உருவாக்கப்படுகிறது.
Xa5, Xa7, Xa13, Xa21 ஆகிய மரபணுக்களின் கூட்டு சேர்க்கை அதிகமாக நோய் எதிர்ப்பு தன்மைக்கு பயன்படுத்தப்படுகிறது. Xa13, Xa21 மரபணுக்களின் கூட்டு சேர்க்கை இந்தியாவில் இலைக்கருகல் நோய்க்கு காரணமான அனைத்து வகையான பாக்டீரியாக்களுக்கு சிறந்த எதிர்ப்புத்தன்மை உருவாக்குவதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.
இந்த மரபணுக்கள் உயர் விளைச்சல் தரக்கூடிய ரகங்களான பூசா பாசுமதி, BPT5204 (சோன மசூரி), திரிகுணா மற்றும் பல ரகங்களிலும் பன்னாட்டு விதை நிறுவனங்களின் ரகத்திலும் பயன்படுத்தப்பட்டு விவசாயிகளின் நிலங்களில் பயிரிடப்பட்டு நோய் எதிர்ப்புத்தன்மை நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்திய விவசாய ஆராய்ச்சிக்கழகம், புதுடில்லி, நெல் ஆராய்ச்சி கழகம், ஹைத்ராபாத், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் மத்திய நெல் ஆராய்ச்சி நிலையம், ஒரிஸா, பஞ்சாப் வேளாண்மைப் பல்கலைக்கழகம், லூதியான், வேளாண்மைப் பல்கலைக்கழகம் தார்வார்ட், கர்நாடகா மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் இலைகருகல் நோய்க்கான எதிர்ப்புத்தன்மை உடைய ரகங்களை மரபணு மூலக்கூறு குறியீடு தேர்வு மூலமாக உருவாக்கி ஆராய்ச்சியில் இருக்கிறார்கள். |
|
பாக்டீரியல் நுண்ணுயிரி நீர் எடுத்து செல்லும் திசுவான சைலம் குழாயின் உட்பகுதியில் பல்கி பெருகி அடைப்பை ஏற்படுத்துதல் |
|