1. கோதுமையின் இலைத்துரு / பழுப்பு துருநோய் : பக்னீசியா ரீகாண்டியா
- நோயின் முதல் அறிகுறியாக இலைகளின் மீது ஆரஞ்சு நிறத்தில் யுரிடோ வித்து காணப்படும். இவை கூட்டம் கூட்டமாக இலையின் பல பகுதிகளிலும் தென்படும்.
- இலை தடித்த கூடுகள் காணப்படும். இவை கூட்டம் கூட்டமாக இலையின் பல் பகுதிகளிலும் தென்படும்.
- இவை தடித்த புள்ளிகளாகத் தோன்றும். இவை உடைந்து யுரிடோ வித்துக்கள் வெளிப்படும்.
- இதன் பின்பு கருநிறமுடைய டீலியோ வித்துக்கூடுகள் தோன்றுகின்றன.
- இது வயலில் உள்ள குச்சிகளிலும், தேவையற்ற செடிகளிலும் தங்கி இருக்கும்.
- இதனுடைய மற்றொரு உயிர் வாழி தாவரம்: தாலிக்டிரம் வகையைச் சார்ந்தது.
- மலைகளிலிருந்து வரும் யுரிடோஸ்போரிஸின் மூலம் இந்நோய் பரவுகிறது.
|
கட்டுப்பாடு
- பயிர் சுழற்சி மற்றும் கலப்பு வகை பயிர் முறை பின்பற்றலாம்.
- அதிகமான தழைச்சத்தை தவிர்க்கவேண்டும்.
- கந்தகத்தை 35-40 கிலோ / எக்டர் என்ற அளவில் தெளிக்கலாம் அல்லது மேங்கோசெப் 2 கிராம் / லிட்டர் என்ற அளவில் பயன்படுத்தலாம்.
- நோய் எதிர்ப்புத்திறன் கொண்ட இரகங்களான லெர்மாரோஜா, சேபெட் லெர்மா, சொனாலிகா மற்றும் சோடிட்டிலெர்மா ஆகியவை பயன்படுத்தலாம்.
|
மேலே
2. தண்டுத்துரு அல்லது கருந்துரு நோய்: பச்சினியா கிராமினிஸ் எஃப்பிசிஸ்
அறிகுறிகள்
- இந்நோய் இலை, இலையுறை, தண்டு, பூப்பகுதிகள் ஆகியவற்றைத் தாக்கும். தாக்கப்பட்ட பகுதிகளில் வெளிர்ப்பச்சைப் பகுதிகள் ஆரம்பித்தல் காணப்படும். வெளிர் பச்சை பகுதியில் யுரிடோ வித்துக்கள் உண்டாகின்றன. இலை பரப்பு பார்க்கும் பொழுதே பழுப்பு நிறத்தோற்றத்தை அளிக்கின்றன. தாக்கப்பட்ட பாகங்கள் விரைவில் காய்ந்துவிடுகின்றன.
- நோய் தீவரமாகும் பொழுது நோயுள்ள செடிகள் வளர்ச்சிக் குன்றிக் குட்டையாக இருப்பதால் நீண்ட தொலைவிலிருந்தே அவற்றைக் கண்டு கொள்ளலாம்.
- பாதிக்கப்பட்ட பயிர்களில் சிறுசிறு கதிர்களே தோன்றுகின்றன. கதிர்களில் மணிகள் இருப்பதில்லை. அவை இருப்பினும் சுருங்கிச் சிறியவையாகக் காணப்படும்.
- பழுப்பு, தடித்த சுவருடையதாகவும் காணப்படுகிறது.
- மாற்று வழி உயிர் தாவரம்: பெர்பெரிஸ் வகையைச் சார்ந்தது.
- மலைவாழ் யுரிடொவித்துக்கள் மூலம் பரவுகிறது.
|
கட்டுப்பாடு
- நோயின் முதல் அறிகுறியாக இலைகளின் மீது ஆரஞ்சு நிறத்தில் யுரிடோ வித்து காணப்படும். இவை கூட்டம் கூட்டமாக இலையின் பல பகுதிகளிலும் தென்படும்.
- இலையில் தடித்த கூடுகள் காணப்படும். இவை கூட்டம் கூட்டமாக இலையின் பல் பகுதிகளிலும் தென்படும்.
- இவை தடித்த புள்ளிகளாகத் தோன்றும். இவை உடைந்து யுரிடோ வித்துக்கள் வெளிப்படும்.
- இதன் பின்பு கருநிறமுடைய டீலியோ வித்துக்கூடுகள் தோன்றுகின்றன.
- இது வயலில் உள்ள குச்சிகளிலும், தேவையற்ற செடிகளிலும் தங்கி இருக்கும்.
- இதனுடைய மற்றொரு உயிர் வாழி தாவரம்: தாலிக்டிரம் வகையைச் சார்ந்தது.
- மலைகளிலிருந்து வரும் யுரிடோஸ்போரிஸின் மூலம் இந்நோய் பரவுகிறது.
|
மேலே
3. கோதுமை உதிரிக் கரிப்பூட்டை : உஸ்டிலாகோ ட்ரிடிசி
அறிகுறிகள்
- கதிரிலுள்ள தானியங்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டு கறுப்பு நிற பூசண வித்துக்கள் அடங்கிய கரிப்பூட்டையாக மாறுகின்றது.
- பாதிக்கப்பட்ட செடியில் பொதுவாக கதிர் பிரியும் வரை அறிகுறிகள் வெளித்தெரிவதில்லை.
ஆனாலும் சோனலிக்கா என்ற இடத்தில் இரகத்தில் பாதிக்கப்பட்ட செடிகளின் கதிருக்கும் அடியிலள்ள இலை மஞ்சள் நிறமடைகிறது.
- இவ்வாறான அறிகுறிகள் கதிர்கள் பிரிந்து கரிப்பூட்டை தோன்றுவதற்கு முன்பாகவே காணப்படுகின்றன.
- இந்த இரகத்தில் பாதிக்கப்பட்ட செடி வளர்ச்சி குறைந்துவிடுகிறது.
- பாதிக்கப்பட்ட கதிர்களில் தானியங்கள் இருப்பதில்லை.
- சிலவகைகளில் பாதிக்கப்பட்ட சில தூர்களிலிருந்து வெளிப்படும் கதிர்களில் மட்டுமே கரிப்பூட்டையின் அறிகுறிகள் வெளிப்படும்.
கட்டுப்பாடு
- கார்பாக்சின் 2 கிராம் / கிலோ அல்லது விட்டாவேக்ஸ் 2 கிராம் / கிலோ என்ற அளவில் விதை நேர்த்தி செய்யலாம்.
- குளிர்ந்த நீரினில் விதைகளை 4 மணி நேரம் நனைத்து வைத்திருத்தல்.
- வெந்நீரில் 132 டிகிரி செல்சியஸ் பாரன்ஹீட் வெப்பநிலையில் 10 நிமிடங்கள் வைத்திருந்து நிழலில் உலரவைத்து பின்பு விதைக்கப் பயன்படுத்தலாம்.
- கடும் வெய்யிலில் நாட்களில் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை நீரில் விதைகளை அமிழ்த்து வைத்திருந்து பின்பு 12 மணி முதல் மாலை 4 மணி வரை வெய்யிலில் சிமெண்ட் தரையில் விதைகளை உலர்த்தவேண்டும்.
|
மேலே
4. வரி துருநோய் /மஞ்சள் துரு நோய் : பச்சினியா ஸ்ட்ரைபார்மிஸ்
அறிகுறிகள்:
- துருநோயி வித்துக்கள் மஞ்சள் (அ) ஆரஞ்சு மஞ்சள் நிறத்தில் காணப்படும். இலைகளில் நேரான கோடுகள் காணப்படும்.
- ஸ்போர் வித்துக்கள் இலை உறைகள், கதிரின் கழுத்துப்பகுதி, கதிர்களின் காணப்படும்
- பயிர்க் குப்பைகள், வேண்டாத செடிகளில் உயிர் வாழும்
- ஓம்புயிரி: அறிப்படவில்லை
- பரவுதல்: பயிர்க்குத்துக்களிலிருந்து யூரிடோஸ்போர்கள் மூலம் பரவும்
மேலே
|