பயிர் பாதுகாப்பு :: எலந்தப்பழப் பயிரைத் தாக்கும் நோய்கள்
மென்மை அழுகல்: ஃபோமோப்சிஸ் நட்சுமே
அறிகுறிகள்:
பழங்களின் மேல் லேசான துறுப்பிடித்த சிவப்பு நிறத்தில், வடிவமற்ற புள்ளிகள் தோன்றும்.
இந்தப் புள்ளிகளின் அளவு அதிகமாக முழு பழத்தையுமே கூழ் போன்று மாற்றிவிடும். இவை பழுப்பு நிறத்தில் இருந்து கருப்பு நிறமாக மென்மையாக மாறி மேல் தோலை இழந்து விடுகின்றன.
கட்டுப்பாடு:
0.5%கார்பன்டாசிம்மை தெளித்தால் நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.