வேர் அழுகல் மற்றும் கிழங்கு அழுகல் நோய்: மேக்ரோஃபோமினாஃபெசியோலீனா
அறிகுறிகள்:
- இலைகள் மஞ்சள் நிறமாதல், நிறம் மாறுதல், வேர் அழுகல் மற்றும் தண்டு மீது பழுப்பு காயங்கள் உருவாகுதல் முக்கிய அறிகுறிகள் ஆகும். கிழங்குகளுக்கும் அழுகல் ஏற்படலாம். தண்டில் சிறிய கருப்பு புள்ளிகள் போன்ற ஸ்க்லோரோசியாஅமைப்புகள் தோன்றும்.
மேலாண்மை:
- கிழங்குகளை சூடோமோனாஸ் ஃபுளுரசன்ஸ் 2 கிராம் /லி தண்ணீரில் இருபதுநிமிடங்கள் நேர்த்தி செய்யவும்.
- நடவு செயுது 30 நாட்களுக்கு பிறகு ஒரு லிட்டர் தண்ணிரில் 2 கிராம் பேசில்லஸ் சப்டிலிஸ் மருந்தூட்டல்.
பொருளடக்க மதிப்பீட்டாளர்கள்:
முனைவர் B.மீனா, உதவிப்பேராசிரியர், மூலிகை மற்றும் நறுமணப்பயிர்கள் துறை, த.வே.ப.க., கோவை - 641003 |
|
வேர் அழுகல் |
|