பயிர் பாதுகாப்பு :: முந்திரி பயிரைத் தாக்கும் நோய்கள்

 

1. நுனிக்கருகல் அல்லது இளஞ்சிகப்பு நோய் :

அறிகுறிகள்
:

  • இந்நோய் முந்திரியில் தோன்றும் ஒரு பொதுவான நோயாகும். இந்நோய் பெரும்பாலும் தென்மேற்கு பருவ மழைகாலத்தில் ஏற்படும்.
  • பாதிக்கப்பட்ட கிளைகளில் வெள்ளை (அல்லது) இளஞ்சிவப்பு நிறத்தில் பூஞ்சை வளர்ந்திருப்பதை காணமுடியும்.
  • பூஞ்சை ஆழமான திசுக்களில் இறங்குமுகமாக ஊடுருவதால்  தளிர்கள் இறக்க நேர்வதால்  நுனி கருகல் நோய் என்று பெயர்
  • கனமழைக்கு பின்னர் பூஞ்சைகளின் நூல் போன்ற மென்மையான படலம் கிளைகளில் காணப்படும்.
  • முற்றிய நிலையில் மரப்பட்டையில் பிளவுகள் மற்றும் தோலுரிந்து காணப்படும்.
  • சில சமயங்களில் ஒரே ஒரு கிளையில் மட்டும் பாதிக்கப்பட்டிருக்கும். ஆனால் பல கிளைகள் மஞ்சள் மற்றும் ஒரு வெறுமையான தோற்றத்தை கொடுக்கும்.

கட்டுப்பாடு :

  • பாதிக்கப்பட்ட கிளைகளை நன்கு முற்றிலும் அழித்திட வேண்டும்.
  • வெட்டு பரப்புகளில் போர்டியாக்ஸ் பசையை பயன்படுத்துவதன் மூலம் பாதுகாக்க வேண்டும்.
  • நோய் தீவிரமாக தாக்கப்பட்டிருந்தால் 1% போராடாக்ஸ் கலவையை தெளிக்க வேண்டும்.
  • தெளிப்பு இரண்டு முறை செய்ய வேண்டும். மே-ஜீன் மற்றும் அக்டோபரில் இரண்டாவது முறை.
  • வறண்ட மற்றும் பாதிக்கப்பட்ட கிளைகளை சேகரிப்பதன் மூலம் மூல நுண்ணுயிர் பாதிப்பை குறைக்க முடியும்.

2. நாற்றழுகல் :

அறிகுறிகள் :

  • வடிகால் வசதி குறைவான நர்சரிகளிலேயே இந்நோய் ஏற்படுகிறது.
  • இந்நோய் வேர் (அல்லது) தண்டும் வேரும் இணையும் இடத்தலும் நாற்றுகள் (அல்லது) இரண்டிலும் தாக்குவதால் இறப்பு ஏற்படும். நாற்றுகள் பைட்டோப்தாரா பால்மிவோராவால் பாதிக்கப்பட்டால் அது வெளிறி காணப்படும்
  • நீரில் நனைந்து தண்டு மற்றும் வேர் பகுதியில் இருண்ட பட்டை வளையம் ஏற்படுகிறது.
  • நாற்றுகள் வாடி இறுதியில் செடிகள் இறந்துவிடுகின்றன.
  • இலைகள் மீது நீரில் நனைந்த புண்கள் தீவிரமாக தாக்கப்பட்டிருப்பது காணமுடியும். இந்த புண்கள் பெரிதாக மற்றும் ஒருங்கிணைவதால் பெரும்பாலும் முழு இலையும் பாதிக்கப்படும்.
  • அனைத்து நோய்களும் தனியாக அல்லது ஒருங்கிணைந்து ஏற்படும்.

கட்டுப்பாடு :

  • போதுமான வடிகால் வசதி படுக்கைகள் மற்றும் பாலித்தீன் பைகளில் வழங்க வேண்டும்.
  • 0.1% அகலால் (அல்லது) போர்டியாக்ஸ் கலவையில் படுக்கைகள்/ பைகளை நனைக்க வேண்டும்.

3.ஆந்த்ரா நோஸ் :

அறிகுறிகள் :

  • இந்நோய் தமிழ்நாட்டில் ஒரு தொற்றுநோய் வடிவில் காணப்படுகிறது. இது பிரேசிலில் கடும் இழப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
  • பூஞ்சகைள் மென்மையான இலைகள், கிளைகள் அழுகல் மற்றும் சிவந்த பழுப்பு நிற நீரில் நனைந்த புண்கள் பாதிக்கப்பட்ட பகுதியில் பிசின் போன்ற கசிவினால் காணலாம்.
  • புண்கள் பெரிதாக பெரிதாக தளிர்களை அழித்திவிடும். மென்மையான இலைகள் சுருங்கியும் மற்றும் பழங்கள் சுருங்கியும் காணப்படும்.
  • பாதிக்கப்பட்ட பூக்கள் கருப்பு நிறத்திற்கு மாறும். மீண்டும் மீண்டும் தொற்றுகளினால் தளிர்கள் மற்றும் மரங்களில் இறப்பு ஏற்படுகிறது.

கட்டுப்பாடு :

  • பாதிக்கப்பட்ட கிளைகள் அனைத்தையும் அழித்திட வேண்டும்.
  • 0.5% போர்டியாக்ஸ் கலவை மற்றும் மாங்கோசெப் தெளிக்க வேண்டும்.

4.மஞ்சரி கருகல் நோய் :

அறிகுறிகள் :

  • இது குறிப்பாக பருவ மழை காலங்களில் கேரளாவில் ஏற்படும் ஒரு பொதுவான நோய் ஆகும்.
  • இந்நோய் பண்பு அறிகுறி மலர் கிளைகள் வாடும். இந்நோய் அறிகுறி முக்கிய தண்டு மற்றும் தண்டில் நீரில் நனைந்த புண்கள் தோன்றும்.
  • இந்நோய் புண்கள் இளஞ்சிவப்பு பழுப்பு நிறத்தில், விரைவில் பெரிதாகவும் மற்றும் சொறி பிடித்ததை போன்றும் மாறும். பிசின்போன்ற கொழுப்பு அமிலம் பாதிக்கப்பட்ட இடங்களில் காணலாம்.
  • புண்கள் பெரிய திட்டுகளாக வளர்ச்சியடைந்து முடிவில் மஞ்சரி வாடிவிடும். வானிலை மேக மூட்டம் நிலவும் போது இந்நோய் மிகவும் கடுமையாக இருக்கும்.

கட்டுப்பாடு :

  • பூஞ்சாணகொல்லி( கியூமன் 100 மிலி /100 லிட்டர் தண்ணீர் அல்லது பிளாடாக்ஸ் 250 கிராம்) மற்றும் பூச்சி கொல்லி(டெமிக்ரான் 30 மிலி/100லிட்டர் தண்ணீர்) கலந்து தெளிக்கலாம்.
  • இந்நோய்க்கு முதன்மை காரணம் தேயிலை கொசு மற்றும் அதற்குஅடுத்த காரணம் பூஞ்சைகள்

5.தண்டு அழுகல் மற்றும் இலை உதிர்தல்

அறிகுறிகள் :

  • இந்நோய் தென் மேற்கு பருவமழை காலங்களான ஜீன்-ஆகஸ்ட் மாதங்களில் இலை உதிர்தல் மற்றும் தண்டு அழுகல் நோய் அறிகுறி காணப்படும்.
  • பிசின் கசிவினால் தண்டில் கருப்பு நீள புண்கள் ஏற்படும். பின்னர் தொற்றும் மேலும் கீழுமாக பரவி மென்மையான தண்டு மற்றும் இலைகளை சுருங்க செய்யும்
  • அதிகம் முற்றாத இலைகளும் பாதிக்கப்பட்டு கருப்பு நிற நீண்ட புண்கள் பக்கவாட்டு நரம்புகள், இலை பரப்பின் மத்தியில் ஏற்படும்.
  • பாதிக்கப்பட்ட இலைகள் விரைவில் உதிரும்.

கட்டுப்பாடு :

  • பருவமழை தொடங்கும் முன் போர்டியாக்ஸ் கலவையை (1%) தெளிப்பதால் நோய் பரவாமல் தடுக்க முடியும்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2013