எண்ணை பனை நம் நாட்டிற்கு ஒரு புதிய பயிர். இதில் பலவிதமான நோய்களின் தாக்குதல் தென்படுகிறது. அவற்றில் ஒன்று குருத்து அழுகல் நோய் ஆகும. இது குறிப்பிடத்தக்க அளவில் பொருளாதார இழப்பை உண்டாக்குகிறது.
குருத்து அழுகல் :
இது இளம் வயது மரங்களில் அதிகமாகக் காணப்படுகிறது. குருத்து இலையின் அடிப்பகுதியில் மரத்தில் வளரும் நுனித் திசுக்களுக்கு அருகில் ஆரம்பித்து குருத்து இலை முழுவதும் பரவுகிறது. நோய் தாக்கிய குருத்து இலையை பிடித்து இழுத்தால் கையோடு வந்துவிடும். இந்நோயைக்கட்டுப்படுத்த, பாதிக்கப்பட்ட திசகு்களை முழுவதுமாக மருந்து ஊற்றவேண்டும். செதுக்கப்பட்ட பகுதியும் குருத்துப் பபுதியம நன்கு நனையும் படி 0.1 சத கார்பன்டாசிம் மருந்து ஊற்றவேண்டும். நோய் கட்டுப்படுத்தப்பட்டு மரங்களில் ஆரம்பத்தில் புதிதாக வெளிவரும் இலைகள் சிறியதாகவும் வளைந்தும் காணப்படும். ஒரு சில மாதங்களுக்குப் பிறகு தான் இலைகள் நல்ல வளர்ச்சியுடன் வெளிவரும்.
இலைப்புள்ளி நோய்கள் :
கர்வுலேரியா என்கிற பூஞ்சாளத்தினால் ஏற்படும் இலைப்புள்ளி நோயில் குருத்து மற்றும் இளம் ஓலைகளில் சிறிய வட்டமான மஞ்சள் நிற புள்ளிகள் தோன்றும். இந்தப் புள்ளிகள் பெரிதாகி பழுப்பு நிறத்திற்கு மாறி இலைகள் காய்ந்து விடும். பெஸ்டோலாஷியாப்ஸிஸ் என்ற பூஞ்சாளத் தாக்குதலால், இலைகளின் ஒழுங்கற்ற பழுப்பு நிறப்புள்ளிகள் காணப்படும். புள்ளிகளின் மையப்பகுதி சாம்பல் நிறமாக இருக்கும். புள்ளிகளின் மேல் கறுப்பு நிறப்பூசண வித்துக்கள் காணப்படும். நோய் தீவிரமடையும்போது புள்ளிகள் பெரிதாகி, பல புள்ளிக்ள மேல் கறுப்பு நிற பூசண வித்துக்கள் காணப்படும். நோய் தீவரமடையும்போது புள்ளிகள் பெரிதாகி, பல புள்ளிகள் ஒன்று சேர்ந்து, ஓலை கருகிவிடும். இந்நோயைக் கட்டுப்படுத்த பாதிக்கப்பட்ட இலைகளை வெட்டி எடுத்து எரித்துவிட்டு 0.2 சத மான்கோசெப் மருந்து தெளிக்கவேண்டும்.
கொல்லாண்ட் :
மண்ணில் ஈரம் குறையும்போது இந்த இடர்பாடு ஏற்படுகின்றது. நாற்றாங்காலில் எல்லாப் பருவங்களிலும் இந்த இடர்பாடு காணப்படும் என்ற போதிலும் முதல் நாற்றாங்காலில் இது அதிகமாகக் காணப்படும். மழை இல்லாத காலத்தில் நடவு ளவயலில் நடும் போதும் இந்த இடர்பாடு காணப்படும். இந்த இடர்பாடினால் ஓலைகள் சரியாக விரியாது. ஓலைகளின் மத்தியில் நூலாக கட்டி வைத்து போன்ற ஒரு சுருக்கம் காணப்படும். ஓலைகளின் நரம்பு புடைத்து காணப்படும். இலைகள் நிமிர்ந்து நேராக நிற்கும். நீர்ப்பாசனம் செய்வதின் மூலம் இந்த இடர்பாட்டினை நீக்கலாம்.
|