பயிர் பாதுகாப்பு :: வெண்டையை தாக்கும் நோய்கள்

பூசண சொறி நோய் (போமோ எக்ஸிகுவா) :

  • காய்களின் மீது நீரில் ஊறியது போன்ற நைவுப்புண் தோன்றும்.
  • ஒழுங்கற்ற விளிம்புகளின் மீது கரும் புள்ளிகள் காணப்படும்.
  • பூஞ்சாண் உருவாகி உருவான பகுதிகள் கருப்ப நிறமாக மாறிவிடும்.
  • பெரோசிலில் வெண்டை அறுவடை பின்சார் அழுகல் நோயால் (ரைசக்டோனியா சொலானி) 80 – 90 சதவிதம் காய் சேதம் அடைந்து உள்ளது.
  • காய் முழுவதுமாக அழுகிவிடும். காய்கள் இயல்பு மாறா பச்சை நிறத்தில் இருந்து பழுப்பு நிறமாக மாறிவிடும். நோய் தாக்கப்பட்ட திசுக்கள் முழுவதும் பூசண இழையினால் மூடிவிடும்.
  • உட்புறம் முதிராத விதைகள் மற்றும் சூல்காம்பும் தாக்கப்படும்.
  • நோய் தாக்கப்பட்ட திசுக்கள் லேசான பழுப்பு நிறத்தில் இருந்து கருப்பு நிறமாக மாறிவிடும்.

வெளிப்புறம், பூசண இழை மென்மையாகவும், மெல்லிய நிறத்திலும் காணப்படும், பழத்தின் மேற்புறம் அடர் நிறத்தில் கெட்டியான பூசண இழைகள் அதிக அளவில் தோன்றும்.


 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2013