பயிர் பாதுகாப்பு :: கேரட் பயிரைத் தாக்கும் நோய்கள்

1. முடி அழுகல் நோய் – ரைசோக்டோனியா சொலேனி

  • இளம் செடி அழுகல்
  • அழுகல் ஆழ்ந்த பழுப்பு நிறத்தில் இருந்து கருப்பு நிறமாக இருக்கும்.
  • திடமான அழுகலினால் குழிப் புள்ளிகள் தோன்றும்.
  • பயிர் சுழற்சி

மேலே

2. பஞ்சு போன்று மென்மை அழுகல் நோய்/வெள்ளை பூசணம் – ஸ்கெலரோட்டினா ஸ்கெலரோடியேரம்

  • பஞ்சு போன்று வெள்ளை பூசண இழை நோய் தாக்கப்பட்ட காய்களின் மீது தோன்றும்.
  • காய்களின் மேல் பகுதி மென்மையாகவும், அழுகியும் காணப்படும்.
  • இந்தப் பூசணம் வயல்களில் மற்றும் சேமிப்பு கிடங்குகளிலும் தோன்றும்.

மேலே

3. கருப்பு அழுகல் நோய் – அல்ட்டர்னேரியா ரேடிசினா

  • ஆணிவேரின் மேல் பச்சை கலந்த கருப்பு நிற பூசணம் தோன்றும்
  • கிழங்கின் அளவைக் குறைத்து விடும்.
  • விதை மூலமும் , மண் வழியாகவும் இந்நோய் பரவும்.
  • குளிர்வான இடத்தில் சேமித்து வைத்தல் நோய் உருவாவதற்கு உகந்தது.

மேலே

4. வேர்கள் பின்னோக்கி காய்தல் – பித்தியம் ஸ்பீசியஸ்

  • துருப்பிடித்த பழுப்பு நிறமாக கிளை வேர்களில் உருவாகும்.
  • கவைக்கோல்கள் தோன்றும் மற்றும் வளர்ச்சி குன்றியும் காணப்படும்.
  • உட்குடைவு புள்ளிகள் தென்படும்.

மேலே

5. பேக்டீரியல் மென்மை அழுகல் நோய் – எர்வினியா கராட்டாவோராசப் ஸ்பீசியஸ் கராட்டாவோரா

  • நோய் தாக்கப்பட்ட திசுக்களில் சாம்பல் நிறத்தில் இருந்து பழுப்பு நிற, மீசை போன்றும், மெல்லியதாகவும் தோன்றும்.
  • பாதிக்கப்பட்ட திசுக்களில் இருந்து துர்நாற்றம் ஏற்படும்.
  • வேரின் குழிப்பினால் இரண்டாம் முறை நோய் தாக்குவதற்கு உகந்தது.
  • எந்திர சேதாரத்தால் திசுக்கள் உருவாகும்.
  • பாக்டீரியாக்கள் முக்கியமாக மண்ணில் தோன்றும், மற்றும் அதிக அளவு மண்ணின் வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தில் நோய்கள் தெளிவாக தெரியும்.
  • வெது வெதுப்பான, ஈரப்பதமான (கோடைக்காலம் மற்றும் இலையுதிர் காலம்) காலங்களில் நோய் தாக்குதல் திடமாக இருக்கும். குளிர் காலங்களில் தாக்குதல் இருக்காது.

மேலே

6. க்ரேட்டர் அழுகல் – ரிசோக்டோனியா ஸ்பீசியஸ்

அறிகுறிகள்:

  • சேமிப்பு கிடங்குகளில் உலர் அழுகல் நோய் தாக்கப்படும்.

கசப்புத்தன்மை :-

  • கேரட்டை குளிர்ந்த இடத்தில் சேமித்து வைத்தால் பாதி அவை (அ) கசப்புத்தன்மையை உருவாக்கும்.
  • எத்திலின் ஒரு வாயு, இது இயற்கையாகவே பழங்கள் அல்லது காய்கறிகள் பழுக்க ஆரம்பிக்கும் போது உருவாகும். பொதுவாக ஆப்பிள், வாழை மற்றும் தக்காளிகளில் உருவாகும்.
  • கேரட்டை முத்திரையிட்ட பிளாஸ்டிக் பைகளில் போட்டு குளிர்பதனப் பெட்டியில் சேமித்து வைக்க வேண்டும். இதனால் காய்கள் எத்திலினை உருவாக்கும்.
  • பீனாலிக் பழுப்பு நிறம் :
  • பீனாலிக் பழுப்பு (அல்லது மேற்புற பழுப்பு நிறம்) நிறம் அல்லது நிறம் மாறி கேரட்டின் மேற்புறத்தில் தோன்றும்.
  • மூட்டைக்கட்டுவதற்கு முன் கேரட்டைக் கழுவி, குளிர்ந்த வெப்பநிலை உள்ள அறைகளில் நிறைய நாட்கள் சேமித்து வைக்கும் போது இது தோன்றும்.

கட்டுப்பாடு :

  • வயலில் சூடு கிளம்பும் முன் விரைவாக அகற்றி விட வேண்டும்.
  • 98 கி/லி டோவிசைடு  (ஓபினைல்பீனால்)ஐ மண்ணில் கலந்து இடவும்.
  • 6 – மீ தாக்சி மெல்லன் எதிர்ப்புத்திறனை அதிகப்படுத்தும்
  • க்ளோரோதலோனில் – விதை மற்றும் மண்ணில் கலந்து இடவும்.
  • 8 வருட சுழற்சியை ஊனூட்டி இல்லாத பயிர்களில் செய்ய வேண்டும்.
  • நோய் இல்லாத விதைகளை பயன்படுத்தவும்.
  • பேசிலஸ் சப்டிலிஸ் மற்றும் டி.விரிடி-யை பயன்படுத்தவும்.

மேலே

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2014