அல்ட்டர்னேரியா அழுகல் – அல்ட்டர்னேரியா அல்ட்டரேன்ட்டா
- காய்களில் சிறிய கருப்பு நிற நைவுப்புண் தோன்றும்
- ஆழ்ந்த சாம்பல் நிறத்தில் வடிவமற்ற நைவுப்புண்கள் நீளமாக உருவாகும்.
- சாம்பல் நிறத்தில் பஞ்சு போன்று பூசண இலைகள், பூசண வித்துக்கள் உருவான நைவுப்புண்கள் மேல் காணப்படும்
- நோய் தாக்கப்பட்ட காய்களில் உள்ள திசுக்கள் காய்ந்து காணப்படும்
- குறைந்த வெப்பநிலை நோய் பரவுவதற்கு உகந்த வெப்பநிலை ஆகும்.
பழம் அழுகல் – பித்தியம் அப்ஷேனிடெர்மேட்டம்
- கொடிகளில் பிளவைகள் வழக்கமில்லாத ஈரப்பதமான பருவங்களில் ஏற்படும். ஆனால் பழம் அழுகலின் அறிகுறிகள் அடிக்கடி காணப்படும்
- பூஞ்சாண் காய்ப்புண்கள், முதிர்ந்த பூக்களின் பகுதிகள் மற்றும் மண்ணைத் தொடும் கொடியின் பகுதிகளில் ஊடுருவிக் செல்லும்
- நீர் கோத்தது போன்ற பகுதிகளில் ஆழ்ந்த பச்சை நிறத்தில் பழம் அழுகல் நோய் தொடங்கும்
- ஈரப்பதமான அழுகல் விரைவாக உருவாகும், வெள்ளை நிற பஞ்சு போன்ற பூஞ்சாண்கள் எளிதாக பரவும்
பிசின் தண்டு கருகல்
- இது வெள்ளரிக்காயிலுள்ள முக்கியமான நோய் ஆகும்.
- டைடினெல்லா ப்ரையோனியேவை முதலில் மைக்கோஸ்பெரெல்லா மெலோனில் என்று இருந்தது
- உகந்த பருவத்தில் நோய்க்காரணிகள் வெள்ளரிக் கொடியில் உள்ள அனைத்து பகுதிகளையும் ஒவ்வொரு வளர்ச்சியின் பருவத்தின் போதும் தாக்கப்படும்
- மஞ்சள் கலந்த பழுப்பு நிற நைவுப்புண்களுடன், கருப்பு நிற பூசண வித்துக்கள் வெள்ளரி தண்டின் மீது தோன்றும்
- ‘வி’ வடிவ நைவுப்புண்கள் வெள்ளரி இலையின் மீது காணப்படும். பூசண வித்துக்கள் இலை நுணி வழியாகப் புகும். இடது புறத்தில் அறிகுறிகள் அறுவடைக்கு முன்பு பழங்களுக்கு உள்ளே அழுகுல் நோய் ஏற்படும். வலது புறத்தில் தீவிர அறிகுறிகள் அறுவடைக்கு பின்பு அழுகல் தோன்றும்
- பூசண வித்துக்கள் உருவான பின்பு, அதிக ஈரப்பதம், குறைவான வெளிச்சம் மற்றும் 20 - 280செ வெப்பநிலையினால் வளர்ச்சி அதிகமாகி பூஞ்சாண்கள் பரவும்
- நோய் தாக்குதலின் அறிகுறிகள் 4 – 8 நாட்களுக்குள் தென்படும்
- பூஞ்சாண்கள் பூசண வித்துக்களை உருவாக்கி பசுமைக்குடிலுக்குள் மறைமுகமாகப் பரவும்
கருப்பு அழுகல்
- அதிகப்படியான முக்கிய நோய்கள் சீமைப் பூசணியில் தோன்றும்.
- பாதிக்கப்பட்ட பழங்களில் கருப்பு அழுகல் நைவுப்புண்கள் வயல்களில் அறுவடைக்கு முன்பு தோன்றும். அறுவடைக்கு முன் விரைவாகத் தாக்கிவிடும்
- வளைய அமைப்பில் கருப்பு நிறப் புள்ளிகள் பூசணியின் மேல் கருப்பு அழுகலாகத் தோன்றும்
- கருப்பு அழுகலின் அறிகுறிகள் சேமிக்கப்பட்ட பட்டர் ப்ரூட்டில் காணப்படும். ஆரம்பத்தில் வெண்கல நிறத்திலும், நீர் கோத்தது போன்ற நைவுப்புண்கள் தோன்றும். இதைத் தொடர்ந்து பூசண இழைகள் டைடிமெல்லா ப்ரையோனியே காணப்படும்
- பெரிய பூசணியில் ஆரம்ப காலத்தில் கருப்பு அழுகல் தென்படும். அதைத் தொடர்ந்து சேதம் ஏற்படும்
- கருப்பு அழுகல் முதலில் பூசணியின் வெளிப்புறம் தோன்றும்
ஆந்தராக்னோஸ் (கொலட்டோட்ரைக்கம் ஆர்பிக்குலேர்)
- பாதிக்கப்பட்ட பூசணியின் மேல் ஆழ்ந்த வட்டவடிவ புள்ளிகள் தோன்றும்
- நைவுப்புண்கள் பெரிதாகவும், வட்ட வடிவத்தில் இருந்து வடிவம் சிதைந்து காணப்படும்
ஸ்க்ளெரோடினியா வெள்ளை பூசணம் – ஸ்க்ளெரோடினியா ஸ்க்ளெரோடியோரம்
- இது தர்பூசணி மற்றும் பூசணியின் வயலில் உருவாகும் அல்லது குளிர்கால சீமைப்பூசணியை சேமித்து வைக்கும் பொழுது உருவாகும்
- வெள்ளை நிற பஞ்சு போன்று பூசணங்கள், கருப்பு நிறத்தில் பட்டாணி அளவில் பூசண வித்துக்கள் தோன்றும். இதுவே பூஞ்சாண் இருப்பதற்கான முக்கிய அறிகுறிகள் ஆகும்
பைட்டோப்தோரா பழம் அழுகல் (பைட்டோப்தோரா கேப்சிஸி)
- பழம் அழுகல் பூசணி வளரும் பொழுது உருவாகும். இது பை, கேப்சிஸி மூலம் உருவாகும்
- நைவுப்புண்கள் பழங்களின் மேல் தோன்றும்
- பழம் அழுகல் மண்ணைத் தொடும் கொடிகளின் ஓரத்தில் உருவாகும்
- பழம் அழுகலினால் தாக்கப்பட்ட பழங்களின் மேல் உள்ள இலைகள் உதிர்ந்துவிடும்
- தீவரமாக பாதிக்கப்பட்ட பழங்கள் சிதைந்துவிடும்.
|