1. வெள்ளை அழுகல் – ஸ்ளேரோடியம் செபிவோரம்
அறிகுறிகள்:
- ஸ்க்ளேரோடியம் செபிவோரமால் வெள்ளை அழுகல் ஏற்படும். ஒரு முறை பூசண வித்து வயலில் தோன்றினால் 20 – 30 வருடங்கள் வரை பூண்டுகள் பயிர் செய்யாதிருந்தாலும் வயலிலேயே தங்கிவிடும்.
- குளிர்ந்த வெப்பநிலை பூஞ்சாணிற்கு உகந்த வெப்பநிலை ஆகும். 750 பே – டிற்கு மேல் வெப்பநிலை இருக்கக் கூடாது. பூண்டு இனம் முதலில் தாக்கப்படும்.
- அடி இலைகள் அழுகியும், மஞ்சள் நிறமாக மாறி தலை கீழாகக் காணப்படும்
- முதிர்ந்த இலைகள் முதலில் நிலை குலைந்து போகும்.
- வேர் அழுகி செடியை முழுவதுமாக நிலத்தை தொடும் அளவிற்கு கீழே தள்ளி காணப்படும்
- வேர்கள் மற்றும் குமிழ்களை வெள்ளை நிறத்தில் பஞ்சு போன்று பூசண இழைகளால் மூடப்பட்டு இருக்கும்
- தாக்கப்பட்ட குமிழ்களில் நீர் போன்று காணப்படும். வெளிப்புற செதில்கள் வெடிப்புற்று, குமிழ்கள் வறண்டும், சுருங்கியும் தோன்றும். சிறிய கருப்பு நிற பூசண வித்துக்கள் பாதிக்கப்பட்ட குமிழ் பகுதிகளில் காணப்படும்.
2. அடி அழுகல் – ஃபுசேரியம் கல்மோரம்
அறிகுறிகள்:
- மண் மூலம் இந்நோய் பூண்டினுடைய வேர்கள் அல்லது சேமித்து வைக்கப்பட்ட இலையைக் காட்டிலும் தண்டுப் பகுதியைத் தாக்கும். தாக்கப்பட்ட செடிகளில் உள்ள இலைகள் நோய் தாக்குதலுக்கான அறிகுறியை உருவாக்காது, ஆனால் நோய் தாக்குதல் ஏற்பட்டு இருக்கும்.
- பூஞ்சாண்கள் கண்ணுக்குத் தெரியாமல் மண்ணிலேயே ஊடுருவும். ஃபுசேரியம் கல்மோரம் யானை பூண்டை தான் தாக்கும், இதே அளவு பூண்டை தாக்காது. வெங்காயம் ஊடுபயிர் இல்லை
3. கருப்புப் பூசணம் – அஸ்பர்ஜில்லஸ் நைகர் மற்றும் அ.அலியேசியஸ்
அறிகுறிகள்:
- வருடம் முழுவதும் தோன்றும்
- முழு திசுக்களும் கருப்பு நிறத்தில் சாம்பல் போன்று காணப்படும்
- தனியாக இருக்கும் குமிழ் உதிர்ந்துவிடும் மற்றும் உறைப்பை இழந்துவிடும்
4. உட்குமிழ் அழுகல் / டிடிமக்ரோபோமினா ஃபேசியோலினா
அறிகுறிகள்:
- சிறிய ஊசிமுனை போன்று நுண்ணிய பூசண வித்துக்கள் செதில்களின் மேல் தோன்றும்
- குமிழ்கள் பழுப்பு நிறமாக மாறி உதிர்ந்துவிடும்
- தாக்கப்பட்ட குமிழ்கள் அதன் உறைப்பை இழந்துவிடும்
கட்டுப்பாடு:
- இந்த நோயைக் கட்டுப்படுத்த பூண்டு குமிழை வறண்ட காற்றோட்டம் உடைய இடத்தில் சேமித்து வைக்கவும்.
- தாக்கப்பட்ட குமிழ்களை சேமிப்பதற்கு முன்பே அகற்றிவிட வேண்டும்
- 0.03% ஃபார்மாலின் கிருமி நாசிணியை குமிழ்களுக்கு பயன்படுத்தவும்.
|