பயிர் பாதுகாப்பு :: உருளைக்கிழங்கு பயிரைத் தாக்கும் நோய்கள்

1. உருளைக்கிழங்கின் பின்பருவ இலைக்கருகல் நோய் – பைட்டோப்தோரா இன்ஃபெக்டன்ஸ்

அறிகுறிகள் :-

  • இது இலைகள், தண்டுகள் மற்றும் கிழங்குகளதை் தாக்கும்.
  • இலையின் மேல் நீர் கோத்தது போன்ற புள்ளிகள் தோன்றும். இது பொயி அளவில் உருவாகி, ஊதா கலந்த பழுப்பு நிறமாக மாறி இறுதியில் கருப்பு நிறமாக மாறும். வெள்ளை வளர்ச்சி இலையின் அடியில் உருவாகும்.
  • இந்த நோய் இலைக்காம்பு, கிளை மற்றும் தண்டுகளுக்கு பரவும்.
  • இது அதிகமாக கணுக்களில் உருவாகும்.
  • இந்த தருணத்தில் தண்டுகள் உடைந்து, செடிகளின் கொழுந்து ஒடிந்துவிடும்.
  • கிழங்குகளில் ஊதா கலந்த பழுப்பு நிறப் புள்ளிகள் தோன்றி, முழுத் தாவரத்தண்டுகளுக்கு பரவிவிடும். தாக்கப்பட்ட கிழங்குகள் துறுப்பிடித்த பழுப்பு நிறத்தில் காய்ந்து மேல் புறத்தில் இருந்து நடுப்பகுதி வரை பரவும்.

கட்டுப்பாடு :

  • ஆர்.ஹெச் - 90%, 10-25º செ. வெப்பநிலை மற்றும் 10º செ இரவு வெப்பநிலை
  • அடுத்த நாள் மேகமூட்டமுடன் இருக்க வேண்டும்.
  • மி.மீ அளவாவது மழைப்பொழிவு இருக்க வேண்டும்.

மேலே

2. முன்பருவ இலைக்கருகல் நோய் – ஆர். சொலேனி

 

அறிகுறிகள் :

  • இது குன்று மற்றும் சமவெளியில் காணப்படும்.
  • பழுப்பு கலந்த கருப்பு நிற காய்ந்த புள்ளிகள் நீள் வட்ட வடிவில் ஒரு மைய வளையம் காணப்படும்.
  • நிறைய புள்ளிகள் ஒன்று சேர்ந்து முழு இலைகள் மேலும் பரவி விடும்.
  • பழங்களில் துப்பாக்கிக் குண்டு போல் தோன்றும்.

கட்டுப்பாடு :

  • வறண்ட வெதுவெதுப்பான வானிலையுடன் இடைவிட்ட மழையும் இருக்க வேண்டும்.
  • தரம் இல்லாத வீரியம்.
  • 25-30º செ. வெப்பநிலை
  • பயிர்களுக்கு தரம் இல்லாத எருவை பயன்படுத்துவது

மேலே

3. அறுவடை பின்சார் கிழங்கு அழுகல் - ஸ்க்ளரோட்டியம் ரேர்ஸ்சி

அறிகுறிகள் :

  • இதனை முதன் முதலில் அறிந்தது யூ.எஸ்.ஏ.வில், 1893 ஆம் ஆண்டில்
  • ஆரம்ப அறிகுறிகள் வாடுவது
  • மஞ்சள் கல்நத பழுப்பு நிறத்தில் பூஞ்சாண் பாதிக்கப்பட்ட கிழங்கின் மேல் தோன்றும்
  • கிழங்குகள் அழுகிவிடும்
  • கிழங்குகள் பால் வெள்ளை மற்றும் கம்பளி மயிர்த்திரள் போன்ற தோற்றத்தில் காணப்படும்

கட்டுப்பாடு:-

  • 30-35º செ. உகந்த வெப்பநிலை
  • ஈரப்பதம் மற்றும் வறண்ட மண் நிலை மாறி மாறி இருக்க வேண்டும்.

மேலே

4. கருத்தூரழுகல் நோய் – ஆர்.சொலேனி

அறிகுறிகள் :

  • கிழங்குகளின் மேல் கரும்புள்ளிகள், கரும்புள்ளிகள் கலந்த சொறி, பழுப்பு நிற கருந்தழும்பு தோன்றும்.
  • முளைவிடும் அனைத்து நேரங்களிலும் ஆழ்ந்த பழுப்பு நிறம் அதன் கண்களில் காணப்படும்.
  • தாக்கப்பட்ட சாற்றுக்குழாய் பகுதிகள் செடியை வாடச் செய்துவிடும்.
  • பாதிக்கப்பட்ட கிழங்குகளின் தோலில் பழுப்பு நிறம் தோன்றும்.
  • உட்புறத் திசுக்கள் கெட்டியாக வறண்டு அழுகி பழுப்பு நிறத்தில் மாறிவிடும்
  • பாதிக்கப்பட்ட கிழங்குகளின் மேல் பஞ்சு போன்ற காணப்படும்.
  • விதைக் கிழங்குகளில் இருந்து எளிமையாகப் பரவும்.
  • மிதமாக குளுமை, ஈரப்பதமான வானிலை மற்றும் 23º செ வெப்பநிலை நோய் உருவாவதற்கு ஏற்ற நிலை ஆகும்.

மேலே

5. பொது சிரங்கு – ஸ்டெப்ட்ரொமைசிஸ் ஸ்கேபீஸ்

அறிகுறிகள் :

  • இதை முதலில் அறிந்தது யூ.கே – 1852 ஆம் ஆண்டில்
  • மற்ற பெயர்கள் – அமெரிக்கன் கருந்தழும்பு, தக்கை கருந்தழும்பு
  • கிழங்கின் தோல் சூழ் அடுக்கி  கெட்டியாக மாறிவிடும் இதுவே முதல் அறிகுறிகளாகும்.
  • கிழங்குகளின் மேற்பகுதி ¼ அங்குலத்திற்கு பழுப்பு நிறமாக தோற்றமளிக்கும்.
  • பாதிக்கப்பட்ட கிழங்கின் மேல் சிறியதாக குழி போன்று காணப்படும்.
  • லேசான பழுப்பு நிறத்தில் இருந்து ஆழ்ந்த பழுப்பு நிறத்தில் பாதிக்கப்பட்ட கிழங்கின் மேல் நைவுப்புண் தோன்றும்.
  • தாக்கப்பட்ட திசுக்கள் பூச்சிகளை ஈர்க்கும்.

மேலே

6. பழுப்பு அழுகல் – ரேல்ஸ்டோனியா சொலனாசிரம்

அறிகுறிகள் :

  • இதை முதலில் அறிந்தது பூனா – 1891 ஆம் ஆண்டில்
  • கிழங்கு உருவாகும் போது வாடிவிடும் இதுவே முக்கிய அறிகுறி ஆகும்.
  • இதற்கு வேறு பெயர் பேங்கில் கருகல் நோய் (அ) பேன்ஜில்
  • இலைகளில் அறிகுறிகள் – வாடி, வளர்ச்சி குன்றி, மஞ்சள் நிறத்தில் மாறிவிடும்.
  • காற்றுக்க குழாய் பகுதிகள் பழுப்பு நிறமாகக் காணப்படும்
  • கண் மொட்டுக்கள் கருப்பு நிறத்தில் இருக்கும்.
  • பாதிக்கப்பட்ட கிழங்குகளில் இருந்து பாக்டீரியா கசிவு ஏற்படும் கெட்ட நாற்றத்தை வெளிப்படுத்தும்.

பாக்டீரியா:-

  • ஜி.எதிரிடை, சிறிய அழுகல், 1-4 நீள் நகரிழைகள்
  • குழல்கள் வெள்ளை நிறத்தில் இருந்து பழுப்பு நிறத்தில் மாறிவிடும்.

கட்டுப்பாடு :-

  • வெப்பநிலை 25-35º செ, ஆர்.ஹெச் 50% மற்றும் கார நிலை 6.2-6.6 இவை நோய் உருவாவதற்கு ஏற்றது.
  • அமில மண் உகந்தது அல்ல.

மேலே

7. மென்மை அழுகல் – எர்வீனியா கரோட்டோவோரா சப் ஸ்பீசியஸ் கராட்டாவோரா

அறிகுறிகள்  :-

  • கருங்கால் நோய் மற்றும் மென்மையழுகல் நோய் இந்த இரண்டு பிரிவுகளிலும் பாதிப்பு ஏற்படும்.
  • செடியின் அடியில் கருப்பு நிற நைவுப்புண் தோன்றும்.
  • பாதிக்கப்பட்ட கிழங்குகள் பழுப்பு நிறத்தில் ஊடுருவிச்  செல்லும்.
  • செடிகள் மஞ்சள் நிறமாகத் தோற்றம் அளிக்கும்.
  • இறுதியாக செடிகள் வாடி, இறந்து விடும்.
  • பட்டைத்துளை (நீரில் ஊறியது போன்ற பழுப்பு நிற அழுகல் நோய் தோன்றும்)
  • அழுகல் நோய் கிழங்கினை சிதைத்து விடும்.
  • மென்மையான, சிவப்பு அல்லது கருப்பு வளையம் பாதிக்கப்பட்ட கிழங்கின் மேல் தோன்றும்.
  • நோய் தாக்கப்பட்ட கிழங்குகள் பூச்சிகளை ஈர்த்துவிடும் (ஹைய்மீலியா மற்றும் போர்வின் ஸ்பீசியஸ்)
  • இவை மாசுபட்ட மண் மற்றும் முதிராத கிழங்கின் மீது பரவும்
  • 21-29º செ மற்றும் 94% ஆா்.ஹெச்

கட்டுப்பாடு:

  • நோய்க்காரணிகளை கட்டுப்படுத்துவது மிகக் கடினம் ஏனென்றால் இவை அதிக நாட்கள் விதை கிழங்குகளிலும், மண்ணிலும் வாழ்ந்து இருக்கின்றது. நோய் தாக்காத கிழங்குகளை பயன்படுத்தினால் நோயின் தாக்கத்தை குறைக்கலாம்.
  • விதை கிழங்குகளை நடுவதற்கு முன் 3% போரிக் அமிலத்தில் 30 நிமிடங்கள் வைத்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். பின் நிழலில் உலர வைக்கவும். இதே நேர்த்தி கிழங்குகளை சேமித்து வைக்கும் பொழுது செய்ய வேண்டும்.
  • நடவு செய்யும் பொழுது 30 கிலோ பி.சி.என். பி-யை ஒரு ஹெக்டர் என்ற அளவில் மண்ணில் கலந்து இடவும். இவ்வாறு செய்தால் நோயைக் கட்டுப்படுத்தலாம்.
  • கோதுமை, பட்டாணி, ஓட்ஸ், வால் கோதுமை, லுபின், சோயாமொச்சை, சோளம் மற்றும் கம்பு இவைகளை வைத்து பயிர் சுழற்சி செய்தால்  நோய் உருவாவதை அறிந்து கொள்ளலாம்.
  • சமவெளிகளில், நோயைக் கட்டுப்படுத்த டி.பி.ஜெட்+அசிட்டிக் அமிலம்+ 0.05% ஜிங்க் சல்பேட் கரைசல் (அ) 1% கார்பன்டாசிம் இவைகளை பயன்படுத்தி விதைக் கிழங்குகளை 15 நிமிடங்கள் வைத்து நேர்த்தி செய்ய வேண்டும்.
  • 0.1ஃபார்மலின் மெர்க்குரிக் க்ளோரைட்டிங் கிழங்குகளை முக்கி வைக்க வேண்டும்.

மேல

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2014