1. நாற்று வாடல் : ப்யுசேரியம் ஸ்பீசியஸ், சொலட்டோட்ரைக்கம் ஸ்பீசியம் மற்றும் ரைசோக்டோனியா
அறிகுறிகள்:
- நாற்று அழுகல் அதிகமாக நாற்றங்கால்களில் தென்படும். இதனால் 5-40% நாற்று இறப்பு ஏற்படும். தாக்கப்பட்ட நாற்றுக்களின் இலைகள் இயற்கை துளிர்வை இழந்து, வாடி பின் இறந்துவிடும்
- நாற்றின் வேர்த்தொகுதி மற்றும் கழுத்துப்பட்டை பகுதிகளில் தரங்கள் மாறி காணப்படும். இவைகள் நிறம் மாறி அழுகிவிடும்
கட்டுப்பாடு:
- தாக்கப்பட்ட நாற்றுக்கள் நோய்களை பரப்பும். இதை அகற்றி நாற்றுகளை அழித்துவிட வேண்டும். பின் 0.25% காப்பர் ஆக்ஸில்க்ளோரைடை நாற்றங்கால்களை சொட்டு சொட்டாக நனைக்கவும்
2.இலை அழுகல் : சிலின்ட்ரோக்ளேடியம் க்வின்குவி செப்டேட்டம்
அறிகுறிகள்
- இளம் மற்றும் முதிர்ந்த பருவத்தில் நாற்றங்கால் மற்றும் முக்கிய வயல்களில் இந்நோய் தென்படும்
- விளிம்புகளில் முதலில் தாக்குதல் கரும்புள்ளிகள் போன்று தோன்றும். பின் இது சில சமயங்களில் எந்தவித தெளிவான அமைப்புகளும் இல்லாமல் பரவும்
- முழு இலைகளிலும் அழுகல் தோன்றும் அல்லது இலைகளின் நுனியில் தோன்றும் பின் உதிர்ந்துவிடும்
கட்டுப்பாடு:
- 0.1% கார்பன்டாசிம் பூச்சிக்கொல்லியை நாற்று மற்றும் இளம் இலைகளில் தெளிக்கவும்
3. கடைசி புள்ளி, கொம்பு கருகல் மற்றும் பூ மொட்டு உதிர்தல் : க்ளியோஜ்பேரியம் க்ளியோஜ்போரியாட்ஸ்
அறிகுறிகள்:
- இலைகளில் காய்ந்த புள்ளிகளின் அளவு மற்றும் வடிவங்கள் வேறுபடும்
- திடமாக தாக்கப்படும் இலைகள் வாடி வதங்கி காய்ந்துவிடும்
- நாற்றங்கால் நாற்றுக்கள் பின்னோக்கிக் காயும் அறிகுறிகள் தோன்றும். கொம்புகளில் தாக்கப்பட்டு பின் இலைகளில் பரவி அதன் மூலம் இலைக்காம்புகள் வரை பரவும்
- தாக்கப்பட்ட கிளைகளில் இலைகள் இல்லாமல் காணப்படும் அல்லது கிளையின் முனைகளில் மட்டும் இளம் இலைகள் தென்படும். கொம்புகளின் மேல் நோய் பரவுவதால் பூ மொட்டும் பாதிக்கப்படுகின்றத,
- அதிகம் மற்றும் தொடர் மழை பொழியும் காலங்களில் பூ மொட்டுகள் உதிர்ந்துவிடும்
கட்டுப்பாடு:
- 0.25%காப்பர் ஆக்ஸில் க்ளோரைட்டை ஒரு மாத கால இடைவெளியில் தெளித்தால் நோயின் செறிவு, இலை உதிர்தல் மற்றும் பூ மொட்டு உதிர்தலை தவிர்க்கலாம்
- ஆரம்பத்தில் தெளிக்கும் தெளிப்பான் பூ மொட்டு உருவாவதற்கும் இதை தொடர்ந்து பூ மொட்டுக்களை அறுவடை செய்யும் வரை தொடர வேண்டும்.
|