பயிர் பாதுகாப்பு :: பீட்ரூட் பயிரைத் தாக்கும் நோய்கள்

அடிச்சாம்பல் நோய்: பெரானோஸ்போரா ஸாஸட்டி

அறிகுறிகள்:

  • குளிர்காலத்தில் இந்த நோய் பொதுவாக காணப்படும்.
  • ஒழுங்கற்ற ஆயில் போன்ற சாம்பல் நிற பகுதிகள் இலைகளில் தோன்றும். ஈரப்பதம் உள்ள காலங்களில், இந்த பகுதி வேகமாகப் பரவி, இலையின் அடிப்புறத்தில் வெள்ளை நிற பொடி போன்ற வளர்ச்சி காணப்படும்.
  • பாதிக்கப்பட்ட இலைகள் காய்ந்து, வேகமாக சுருங்கி விடும். பூக்கொம்புகள் குட்டை வளர்ச்சியுடன், உருமாறியும் காணப்படும்
  • பூங்கொத்து முழுவதும் உட்டு மொத்தமாக சேர்த்து தோற்றமளிக்கும். அதிகப்படியான இலைகள் தோன்றியுள்ளது போன்று காட்டிசியளிக்கும்.
  • மண்ணில் உள்ள பயிர் குப்பைகளின் மீது இந்த பூஞ்சாண் உயிர் வாழும். விதையின் மூலமும் பரவும்.

கட்டுப்பாடு:

  • வயலைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
  • எதர்ப்புச் சக்தியுள்ள இரகங்களை பயிரிட வேண்டும்.
  • தீரம் 2.5-3 கிராம்/கிலோ விதை என்ற அளவில’ விதை வளர்ச்சி செய்ய வேண்டும்.
  • டைத்தேன் 2-78 (0.3%) 15 நாட்கள் இடைவெளியில் மூன்று முறை தெளிக்க வேண்டும்.





அறிகுறிகள்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015