பீட்ரூட் மஞ்சள் வைரஸ்: வைரஸ்
அறிகுறிகள்:
- அசுவினியின் மூலம் இந்த நோய் பரவும்.
- இளம் இலைகளில் மஞ்சள் நிற புள்ளிகள் ஆரம்ப நிலையில் தோன்றும்.
- நோயின் தாக்கம் அதிகமாகும் போது, இலைகளில் ஒழுங்கற்ற மஞ்சள் நிற திட்டுக்கள் பச்சை நிற இலைகளுடன் சேர்ந்து காணப்படும்.
- வயதான இலைகள் பசுஞ்சோகையுடன், தடித்து, உடையும் நிலையில் காணப்படும். இலைப் பரப்பு சிவப்பு அல்லது மஞ்சள் நிறமாக தோன்றும். பின் இறந்துவிடும்.
கட்டுப்பாடு:
- பாதிக்கப்பட்ட செடிகள் மற்றும் இலைகளை அகற்ற வேண்டும்.
- மீத்தைல் ஆக்ஸிடெமட்டான் 25.இ.சி (2மிலி/லிட்டர் நீர்) தெளிப்பதால் அசுவினிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தலாம்.
|
|
அறிகுறிகள் |
|