பயிர் பாதுகாப்பு :: பூண்டு பயிரைத் தாக்கும் நோய்கள்

மேக்ரோபொமினா அழுகல் : மேக்ரோபொமினா பேசோலின
இளஞ்சிவப்பு அழுகல் : பைரோனா கீட்டா டேட்டஸ்டிரிஸ்
தேமல் நோய்
அஸ்பெர்ஜில்லஸ் அழுகல் : அஸ்பெர்ஜில்லஸ் நைஜர்

1.மேக்ரோபொமினா அழுகல் : மேக்ரோபொமினா பேசோலினா

அறிகுறிகள்:

  • மண்ணில் உள்ள ஈரப்பதத்தினால் இந்த நோய் பரவும்
  • பூண்டின் விதைக் குமிழ்கள் அழுகிவிடும். கருமை நிற ஸ்கிளிரோசியா மற்றும் பிக்னிடியா காணப்படும்.

கட்டுப்பாடு:

  • பார்மலின் 0.03% (அ) போரிக் அமிலம் 2% என்ற அளவில் பூண்டுக் குமிழ்களை அறுவடை செய்தவுடனே இந்தக் கரைசலில் நனைய வைப்பதால் சேமிப்பின் போது அழுகுவதைத் தடுக்கலாம்.

மேலே

2.இளஞ்சிவப்பு அழுகல் நோய் : பைரோனா கீட்டா டேட்டஸ்டிரிஸ்

அறிகுறிகள்:

  • நாற்று நிலையிலிருந்தே இந்த பூஞ்சாண் தாக்கும்
  • வேர்கள் தாக்கப்படும். இளஞ்சிவப்பு (அ) சிவப்பு கலந்து மற்றும் சில சமயங்களில் சிவப்பு (அ) ஊதா நிற கருப்பு ஸ்போர்கள் வேர்களில் தோன்றி, வேர்கள் ஒரேமாதிரி சுருங்கி இறந்துவிடும்
  • நோய் தாக்கிய செடிகள் எளிதாக பிடுங்க வரும். மண்ணிற்கு மேலே செடிகள் குட்டை வளர்ச்சியுடன், இலைகளின் நுனி மஞ்சள் நிறமாகி, நுனிக் கருகல் ஏற்படும்
  • நோய் தாக்கிய நாற்றுக்கள் இறந்துவிடும். வயதான செடிகள் மடியாது ஆனால் குமிழ் உருவாவது தடைபடும். மகசூல் குறையும்
  • குமிழ்களின் வெளிப்பகுதி துளைக்கப்பட்டாலும் குமிழ்கள் தாக்கப்படாது
  • பருவம் முழுவதும் புதிய வேர்கள் உருவாகும். சில சமயங்களில் இலை தாக்கப்பட்டு, இறக்கவும் செய்யும்

கட்டுப்பாடு:

  • தொடர்ந்து நீளமான பயிர் சுழற்சி முறையை மேற்கொள்ள வேண்டும்.

மேலே

3.தேமல் நோய் : பூண்டு தேமல் நச்சுயிரி

அறிகுறிகள்:

  • தேமல் நோய் இரியோபிட் கரையான், ஆசிரியா டுலிப்பே மூலம் பரவும்
  • தனிப்பட்ட தேமல் பல்வண்ண நிறமாக இலைகளில் தோன்றும்

கட்டுப்பாடு:

  • அகாரிசெட் கரையான் மருந்துகளைத் தெளிக்க வேண்டும்.

மேலே

4. அஸ்பர்ஜில்லஸ் அழுகல் : அஸ்பர்ஜில்லஸ் நைஜர், அ.அல்லியேசியஸ், அ.ரைபன்ஸ், அ.ஸ்கிளிரோடியேனம்

அறிகுறிகள்:

  • பூண்டு குமிழ்கள் அழுகி, கருப்பு (அ) பழுப்பு (அ) வெள்ளை நிறத்தில் காணப்படும்
  • பகுதி (அ) முழுமையாக அழுகிக் காணப்படும்.

கட்டுப்பாடு:

  • பூண்டு குமிழ்களை உலர்ந்த இடத்தில் சேமிக்க வேண்டும்
  • நோயுள்ள குமிழ்களை சேமிப்பிற்கு முன் கழித்துவிட வேண்டும்
  • குமிழ்களை 0.03% பார்மலினுடன் புகையூட்டம் செய்ய வேண்டும்.

மேலே

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2013