பயிர் பாதுகாப்பு :: உருளைக்கிழங்கு பயிரைத் தாக்கும் நோய்கள்
பின் கருகல் நோய்: பைட்டோபதோரா இன்பேஸ்டன்ஸ்
தாக்குதலின் அறிகுறிகள்:
  • இந்நோய் இலைகள், தண்டுகள் மற்றும் கிழங்குகளை பாதிக்கிறது.
  • நீர் கசியும் புள்ளிகள் இலைகளில் தோன்றும். பின் அதன் அளவு குறித்து அடர் பழுப்பு நிறமாக மாறி, இறுதியில் கருப்பு நிறமாகிறது.
  • இலையின் பின்புறத்தில் இப்பூசணம் வெள்ளை நிறத்தில் காணப்படும்.
  • இது காம்பு, தண்டு பாகத்திற்கும் பரவுகிறது.
  • இதுஅடிக்கடி கணுக்களை பாதிக்கிறது.
  • கணு புள்ளிகளில் தண்டு உடைந்து, செடியின் மேல்பாகம் விழுந்து விடும். அடர் பழுப்பு நிறமான புள்ளிகள் கிழங்கின் மேற்பரப்பில் பரவுகிறது.பாதிக்கப்பட்ட கிழங்குகள் துரு போன்று பழுப்பு நிறமாக மேற்பரப்பில் இருந்து நடுப்பகுதி வரை காணப்படுகிறது.
   
நீர் கசியும் புள்ளிகள   கருப்பு நிற புள்ளிகள்   வெள்ளை பூஞ்சை வளர்ச்சி
 
துரு போன்று கிழங்கு   பாதிக்கப்பட்ட வயல்
நோய் காரணி:

பரவல் மற்றும் வாழ்வதற்கான முறை:

  • பாதிக்கப்பட்ட கிழங்கு மற்றும் பாதிக்கப்பட்ட மண், தொற்றுக்கு முதன்மை காரணமாக அமைகிறது.
  • நோயுற்ற கிழங்குகள், ஒரு பயிரிலிருந்து மற்றொரு பயிரில், நோய் நிலைத்து இருப்பதற்கான முக்கிய காரணியாக இருக்கிறது.
  • ஸ்போராஞ்சியா காற்ற மூலம் நோய் பரவ காரணமாக அமைகிறது.

நோய் தோன்றும் சூழ்நிலைகள்:

  • RH  - >90 %, வெப்பநிலை 10- 25° செல்சியஸ் மற்றும் இரவு வெப்பநிலை 10°செல்சியஸ்.
  • மழைக்க முன் வரும் மேகமூட்டம், குறைந்த பட்சம் 0.1 மி.லி. மழைப்பொழிவு மற்றும் மழைக்கு அடுத்து வரும் தினங்கள்
கட்டுப்படுத்தும் முறை:
  • மேன்கோசெம் அல்லது ஸினப் 0.2% தெளிப்பான் மூலம் கிழங்குகளை நோய் தொற்றிலிருந்து தடுக்கலாம்.
  • அறுவடையின் போது காயங்களைத் தவிர்ப்பதன் மூலமும் கிழங்கு மாசு தொற்றிலிருந்து தடுக்கலாம்.\
  • சாகுபடிக்கு பரிந்துரைக்கப்படும் எதிர்ப்பு சக்தி கொண்ட ரகங்கள் குப்ரி நவீன், குப்ரி ஜீவன், குப்ரி அலங்கார், குப்ரி காசி காரோ மற்றும் குப்ரி மோடி.
  • அறுவடைக்கு சில தினம் முன் பாதிக்கப்பட்ட இலைகளை அகற்றி பொருத்தமான களைக்கொல்லிகளைத் தெளிப்பதன் மூலம் நோயினைக்கட்டுப்படுத்தலாம்.
Source of Images:
http://www.apsnet.org/edcenter/intropp/lessons/fungi/Oomycetes/Article%20Images/LateBlight03.jpg
https://upload.wikimedia.org/wikipedia/commons/b/ba/Late_blight_on_potato_leaf_3.jpg
http://www.plantpath.cornell.edu/Fry/images/photos/fig1a_500.jpg
https://s3.amazonaws.com/assets.cce.cornell.edu/slides/21935/image/sized/late_blight_on_potatoes.jpg?1436974397
http://www.potatogrower.com/Images/gallery/288_1600.jpg

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015