பயிர் பாதுகாப்பு :: உருளைக்கிழங்கு பயிரைத் தாக்கும் நோய்கள்
முன் இலைக்கருகல் : அல்ட்டர்னேரியா சொலானி
தாக்குதலின் அறிகுறிகள்:
இது மலைகள் மற்றும் சமவெளி இரண்டிலும் உள்ளது.
இலைகளில் வெளிர் பழுப்பு நிறமுடைய புள்ளிகள் தோன்றும். பின்பு இப்புள்ளிகளில் வட்டவடிவமா வளையங்கள் தோன்றும்.
சில புள்ளிகள் இணைந்து இலை முழுவதும் பரவுகிறது.
பழங்களில் ஓட்டை விழும்.
இலைகளில் கோண புள்ளிகள்
பொதுமைய வளையங்கள்
பாதிக்கப்பட்ட பயிர்
பழங்களில் ஓட்டை
நோய் காரணி:
பரவல்மற்றும் வாழ்வதற்கானமுறை:
பூசணம் மற்றும்மண்ணில் உள்ள பூசண இலைகள் அல்லது பாதிக்கப்பட்ட செடியின் குப்பைகள் 17 மாதங்களுக்கு மேல் இருக்கக் கூடும்.
பூசணம் அல்லது புதிய பூசண இலைகள் அடுத்தடுத்து வரும் புதிய உருளைக்கிழங்குகளின் பாதிப்பிற்கு காரணமாக அமைகிறது.
இரண்டாமி நிலை தொற்றுதல், நோய் பரவுவதற்கு முக்கியமான காரணம்.
முதன்மை தொற்று மூலம் உருவான புள்ளிகளில் வரும் பூஞ்சைகள் காற்று மூலம் நீண்ட தூரம் பரவுகிறது.
பாதிக்கப்பட்ட தாவரத்தில் இருக்கும் பூசண இழைகள் மழை மற்றும் பூச்சிகள் மூலம் அடுத்தடுத்து தாவரங்களுக்குப் பரவுகிறது.
நோய் தோன்றும் சூழ்நிலைகள்:
விட்டு விட்டு பெய்யும் மழைக்குப்பின் உலர்ந்த சூடான வானிலை.
மோசமான வீரியம் உள்ள வெப்பநிலை 25- 30°செல்சியஸ்
பயிர்களுக்குப் போதுமான உரம் இல்லாமை
கட்டுப்படுத்தும் முறை:
நோய் இல்லாத விதைக்கிழங்குகளை நடவுக்குப் பயன்படுத்த வேண்டும்.
பாதிக்கப்பட்ட தாவரத்திலிருந்து விழும் இலைகளை அகற்றதல் வேண்டும். ஏனெனில் பாதிக்கப்பட்ட இலைக்குப்பைகள் நோய் பரவுவதற்கு முதன்மைக் காரணமாக அமைகிறது.
சினேப் அல்லது காப்டான் 0.2%,மிகவும் ஆரம்ப நிலையில் தெளித்தல் மற்றும் 15- 20 நாட்கள் இடைவெளியில் மீண்டும் தெளிப்பதன் மூலம் பயனுள்ள கட்டுப்பாட்டை அடையலாம்.
நோய் எதிர்ப்புச்சக்தி கொண்ட குப்ரி சிந்தூரி என்ற ரகத்தைப் பயன்படுத்தலாம்.