பயிர் பாதுகாப்பு :: உருளைக்கிழங்கு பயிரைத் தாக்கும் நோய்கள்
கருந்திரள் நோய் : ரைசோக்டோனியா சொலானி
தாக்குதலின் அறிகுறிகள்:
கிழங்குகளில் கருப்புப் புள்ளி, கருப்புப் பொருக்குப்புள்ளி, பழுப்பு நிறப்பொருக்கு தோன்றும்.
அதி வேகமாக வளரும் போது, அடர் பழுப்பு நிறம் கண்ணிற்குத் தெரிகிறது.
பாதிக்கப்பட்ட சைலம் திசு செடிகளை அழுகச் செய்கிறது.
உள் திசுக்கள் பழுப்பு நிறமான உலர்ந்த கடினமான அழுகலைக் கொண்டிருக்கும்.
வெகுவான பாதிக்கப்பட்ட கிழங்கு தோன்றும்.
விதை கிழங்குகள் நோய் பரவுவதற்கு காரணமாக உள்ளது.
மிதமான குளிர், ஈர வானிலை மற்றும் 23°செல்சியஸ் வெப்பநிலை நோய் வளர்ச்சிக்குக் காரணமாகிறது.
கிழங்குகளில் கருப்புப் புள்ளி
பழுப்பு நிறப்பொருக்கு
தண்டு மீது மூழ்கிய புண்
அழுகிய தண்டு
நோய் காரணி:
பரவல்மற்றும் வாழ்வதற்கானமுறை:
விதை கிழங்குகளில் உள்ள செலரோஷியா, கிழங்கிலிருந்து தோன்றும் மற்ற செடிகளை பாதிப்பிற்கு முதன்மைக் காரணமாக அமைகிறது.
மண்ணில் உள்ள மைசீலியம் பூஞ்சான் சாதகமான நிலையில் இலையை உற்பத்தி செய்கிறது.
கட்டுப்படுத்தும் முறை:
நோய் இல்லாத விதைக்கிழங்குகளை மட்டும் நடப்பட வேண்டும்.
கருந்திரள் நோய் சிறிது இருந்தாலும், மெர்க்குரிக் குளோரைடு கரைசலில் 1.5 மணி நேரம் மற்றும் அசிடுலேட்ட் மெர்க்குரிக் குளோரைடு கரைசலில் 5 நிமிடம் விதை நேர்த்தி செய்வதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.
மண்ணை பென்டாக்குளோரோனி ட்ரோபென்சீன் ஐக்கொண்டு நேர்த்தி செய்வதன் மூலம் 70 கிலோ/ எக்டர் என்ற வீதம் நோயைக்குறைக்கிறது. ஆனால் இது மிகவும் விலையுயர்ந்த்து மற்றும் சிக்கலானது.
நன்கு ஸ்போருலேட்ட்ட் கிழங்கை மேலோட்டமாக நடவு செய்வதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.
பாதிக்கப்பட்ட நிலத்தை 2 ஆண்டுகள் தரிசாக விடுவதன் மூலம் நோயின் தீவிரத்தன்மையை குறைக்கலாம்.