பயிர் பாதுகாப்பு :: உருளைக்கிழங்கு பயிரைத் தாக்கும் நோய்கள்
தக்கை போன்ற பொருக்கு: ஸ்ட்ரெப்டோமைசஸ் ஸ்காபீஸ்
தாக்குதலின் அறிகுறிகள்:
தக்கை போன்ற கிழங்கு (பெரிடெம் )அறிகுறியின் பண்புகளாகும்.
கிழங்கின் மேற்பரப்பில் ¼ அங்குல துரு போன்ற தோற்றத்தில் காணப்படும். பாதிக்கப்பட்ட கிழங்கில் சிறிதாக உருவாகிறது.
பாதிக்கப்பட்ட கிழங்குகளில் உள்ள புண் வெளிர் பழுப்பு நிறத்திலிருந்து, அடர் பழுப்பு நிறத்திற்கு மாறுகிறது.
பாதிக்கப்பட்ட திசுக்கள் பூச்சிகளை ஈர்க்கும்.
கிழங்குகளில் உள்ள புண
தக்கை போன்ற கிழங்கு
பாதிக்கப்பட்ட கிழங்கு
குறுக்கு பிரிவில்பாதிக்கப்பட்ட கிழங்கு
நோய் காரணி:
பரவல்மற்றும் வாழ்வதற்கானமுறை:
இது முட்டைக்கோஸ், கேரட், கத்தரிக்காய், வெங்காயம், முள்ளங்கி, கீரை மற்றும் நூல்கோல் தாக்குகிறது.
காரண உயிரிகள், மண்ணில் நிலைத்திருந்து ஒவ்வொரு ஆண்டும் பயிர்த் தொற்றுக்குக் காரணமாகிறது.
நோயினால் பாதிக்கப்பட்ட உருளைக்கிழங்கு, நோய் நீண்ட தூரம் பரவுவதற்குக் காரணமாக உள்ளது.
நோய்க்காரணி விலங்குகளின் செரிமான பாதையில் இருந்து மக்கிய தொழு உரத்தின் மூலம் பரவுகிறது.
கட்டுப்படுத்தும் முறை:
பொருக்கு இல்லாத விதை உருளைக்கிழங்கை நடுவதன் மூலம் நோய் மற்ற செடிகளுக்குப் பரவாமலும் தாக்காமலும் பாதுகாக்கலாம்.
விதைக்கிழங்குகளில் உள்ள நோயை நீக்க, 0.1% மெர்க்குரிக் குளோரைடு கரைசலில் 1.5 மணி நேரமும் அல்லது ஒரு பகுதி ஃபார்மால்டிஹைடு மற்றும் 240 பகுதி தண்ணீரில் 2 மணி நேரம் விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
நடவு நேரத்தில் மண்ணில் PCNB உதவியால் நோயைக் குறைக்க முடியும்.
உருளைக்கிழங்கை நடுவதற்கு முன் இயற்கை உரமிடுதல் மூலம் நோயின் பாதிப்பைக் குறைக்கலாம்.
பொதுவான இரங்கு உவர் மண்ணில் அதிகமாகக் காணப்படுகிறது. எனவே ஆல்கலைன் உரமான கால்சியம் அம்மோனியம் நைட்ரேட்டைத் தவிர்க்க வேண்டும்.