ஆல்டர்னேரியா இலைப்புள்ளி: ஆல்டர்னேரியா வகை
அறிகுறிகள்:
- இலைகள், தண்டுகள், காய்கள் மற்றும் விதைகளை தாக்குகின்றன
- இலைகளில் முதலில் அறிகுறிகள் தோன்றும். விதை தண்டுகளில், சிறிய, மஞ்சள்நிற, சற்றே உயர்ந்த புள்ளிகள் காணப்படும்
- பின் இந்த புள்ளிகள் தண்டுகள் மற்றும் விதைக் காய்களுக்குப் பரவும். மழைக் காலங்களில் நோய் பரவும். முழுக் காயும் தாக்கக்கூடும், நுனிப் பகுதி கருப்பாகவும், சுருங்கியும் காணப்படும்
- காய்த் திசுக்களை பூஞ்சான் துளைக்கும். முடிவில் விதைகளைத் தாக்கும். விதைகள் முளைக்காமல் நின்று விடும்
கட்டுப்பாடு:
- மான்கோசெப் 0.25% தெளிக்க வேண்டும்.
|
|