பயிர் பாதுகாப்பு :: பிரண்டை பயிரைத் தாக்கும் பூச்சிகள்

பிரண்டை

பச்சைக் கொம்புப்புழு
இப்புழுக்கள் இலை மற்றும் தண்டுகளை முற்றிலுமாக உண்டு அழிக்கின்றன. அந்துப்பூச்சி பருமனாகவும், வேகமாகப் பறக்கும் தன்மையுடையது. இறக்கைகள் பச்சை நிறத்தில் வெள்ளை   நிறப் பட்டைகளுடன் காணப்படும். புழுக்கள் பச்சை நிறத்தில் உருண்டையாகவும், பருத்த உடலின் பின்பகுதியில் கொம்பு போன்ற உறுப்புடனும் காணப்படும். அக்கொம்பில் சீரான இடைவெளியில் குட்டையான முட்கள் கொம்பின்  முழு நீளத்திற்கும்  காணப்படும்.
மேலாண்மை முறைகள்
  • தாக்கப்பட்ட  இலைகளையும்,  புழுக்களையும் சேகரித்து அழித்து விட வேண்டும்.
  • விளக்குப் பொறிகளை அமைத்து தாய் அந்துப் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம்.
  • புழுக்களின் எண்ணிக்கையும், சேதமும் பொருளாதார சேத நிலையைத் தாண்டும் பொழுது, வேப்பெண்ணெய் 3 சதம் அல்லது வேப்பங்கொட்டைப் பருப்பு சாறு 5 சதம் ஏக்கருக்கு  என்ற அளவில் கலந்து  தெளித்துக் கட்டுப்படுத்த வேண்டும்.
Updated on March, 2014

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2014