பயிர் பாதுகாப்பு :: வேம்பு பயிரைத் தாக்கும் பூச்சிகள்

பயிர்: வேம்பு, அறிவியல் பெயர்: அஸாடிராக்டா இன்டிகா,

குடும்பம் : மெலேசியே


தேயிலைக் கொசு நாவாய்ப்பூச்சி: ஹலோபெல்டிஸ் ஆன்டனி

சேதத்தின் அறிகுறி:

  • குஞ்சுகளும், பூச்சிகளும் சூரியன் மறைந்த பின்பு தாவர திசுக்களில் உள்ள சாற்றை உறிஞ்சும்
  • இளம் இலைகளும், கிளைகளும் காய்ந்துவிடும்
  • தாக்கப்பட்ட கிளைகள் எரிந்ததுபோல் காணப்படும்
  • இலைகளின் நுனிகள் காய்ந்து காணப்படும்

பூச்சியின் விபரம்:

  • பூச்சி கருப்பு நிறமாகவும் சிவந்த கழுத்தை உடையதாகவும், பழுப்பு நிற இறக்கையுடனும் காணப்படும்

கட்டுப்படுத்தும் முறை:

  • பாசலோன் 2 மி.லி / லிட்டர் நீரில் கரைத்து சாயங்காலத்தில் தெளித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015