|
பயிர் : அவுரி
அறிவியல் பெயர் :
கேசியா அங்குஸ்டிபோலியா்
குடும்பம் : கோசால்பினியேசியே |
பச்சைப்புழு (வெள்ளை மற்றும் மஞ்சள் பட்டாம் பூச்சிகள் )
இப்புழுக்கள் இளம் இலைகளைக் கடித்து உண்டு அதிக அளவில் சேதத்தை உண்டாக்குகின்றன. புழுக்கள் உருண்டையாக பச்சை நிறத்தில் மஞ்சள் நிற வளையங்களோடு காணப்படும். பட்டாம்பூச்சியின் இலைகளின் மேற்பரப்பு வெண்மை நிறத்தில் காணப்படும். பட்டாம்பூச்சியின் முன் இறக்கையில் கருமை நிற நீட்சி காணப்படும். பெண்பட்டாம் பூச்சியின் இறக்கைகளை சுற்றிலும் கருநிற கோடுகள் காணப்படும்.
மேலாண்மை முறைகள்
தாக்கப்பட்ட இலைகள் மற்றும் புழுக்களைக் கைகளால் அப்புறப்படுத்தி அழிக்க வேண்டும். வயல்களில் ஆங்காங்கே குச்சிகளை நட்டு பூச்சி ஊண்ணும் பறவைகளை ஊக்குவிக்கலாம். டிரைக்கோகிரம்மா கைலோனிஸ் மற்றும் அபான்டிலஸ் ஒட்டுண்ணிகளை வயல்களில் விட்டும் கட்டுப்படுத்தலாம். பேசில்லஸ் வகை பாக்டீரியா லிட்டருக்கு 2 கிராம் அல்லது வேப்பங்கொட்டை பருப்பு சாறு 5 சதம் அல்லது வேப்பெண்ணெய் 3 சதம் தெளித்து கட்டுப்படுத்தலாம்.
|
|
|
|
புழு |
கூட்டுப்புழு |
புழு |
கூட்டுப்புழு |
|
|
அந்துப்பூச்சி |
அந்துப்பூச்சி |
காய்த்துளைப்பான் -ஈடியெல்லா சின்கினெல்லா
இதன் புழுக்கள் காய்களின் மேல் நுண்ணிய துளைகளை உண்டாக்கி உட்சென்று விதைகளை சேதப்படுத்துகின்றன.
பெண் அந்துப்பூச்சி, முட்டைகளைத் தனித்தனியாக பிஞ்சுக்காய்களின் மேல் இடும். புழுக்கள் பச்சை நிறத்திலும், முதல் மார்புக் கண்டத்தின் மேல் ஐந்து கருமை நிறப் புள்ளிகளைக் கொண்டும் தென்படும். முழு வளர்ச்சியடைந்த புழுக்கள் இளம் சிவப்பு நிறமாக மாறி, காய்களிலிருந்து வெளிவந்து, நிலத்தில் மண்ணினாலான கூட்டினுள் கூட்டுப்புழுக்களாக மாறும். அந்துப்பூச்சிகள் சிறிய அளவிலும், சாம்பல் கலந்த பழுப்பு நிற முன் இறக்கைகளின் மேல் விளிம்பை ஒட்டி ஒரு வெண்ணிற பட்டைக் கோடுடனும், பின் இறக்கைகள் மங்கிய நிறத்திலும் காணப்படும்.
மேலாண்மை முறைகள்
புழுக்கள் மற்றும் தாக்கப்பட்ட காய்களை அகற்றி அழித்தல் வேண்டும். விளக்குப் பொறிகளை ஹெக்டருக்கு ஒன்று என்ற அளவில் அமைத்து அந்துப்பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம். டிரைக்கோகிரம்மா கைலோனிஸ் ஒட்டுண்ணியை ஒரு எக்டருக்கு 5 சி.சி. என்ற அளவில் விட்டும் கட்டுப்படுத்தலாம். பேசில்லஸ் வகை பாக்டீரியாவை (0.2 சதம்), 50 சதவிகித பூக்கும் பருவத்தில் தெளித்துக் கட்டுப்படுத்தலாம். வேப்பங்கொட்டை பருப்பு சாறு 5 சதம் அல்லது வேப்பெண்ணெய் 3 சதம் தெளித்து கட்டுப்படுத்தலாம்.
|
|
|
புழு |
கூட்டுப்புழு |
அந்துப்பூச்சி |
சாம்பல் வண்டு
இந்த வண்டுகள் பெரும்பாலும் இலைகளில் சிறு துவாரங்கள் ஏற்படுத்தியும், ஓரங்களைக் கடித்தும் சேதம் உண்டாக்குகின்றன. சில சமயங்களில் அதிக அளவில் தோன்றி பெருத்த சேதத்தை உண்டாக்கும். வண்டுகளின் புழுப்பருவம் செடிகளின் வேர்ப்பாகத்தில் மண்ணிற்குள் காணப்படும். புழுக்கள் வேர்களின் நுனிகளைக் கடித்துத் தின்பதால் தாக்கப்பட்ட செடிகள் வாடி, நாளடைவில் காய்ந்து விடும்.
மேலாண்மை முறைகள்
சாம்பல் வண்டுகளைக் கட்டுப்படுத்த 3 சத வேப்பெண்ணெய் அல்லது 5 சத வேப்பங்கொட்டை பருப்பு சாறு தெளிக்க வேண்டும். மண்ணினுள் உள்ள புழுக்களைக் கட்டுப்படுத்த வேப்பம்புண்ணாக்கு ஒரு ஏக்கருக்கு 500 – 1000 கிலோ என்ற அளவில் மண்ணில் இடுதல் வேண்டும்.
புகையிலை வண்டு
இவ்வண்டுகள் சேமிக்கப்படும் விதைகளைத் தாக்குகின்றன. தாய்ப்பூச்சி முட்டைகளை விதைகளின் மீது தளர்வாக இடும். முட்டையிலிருந்து வெளிவரும் புழுக்கள் விதைகளைத் துளைத்து உண்டு சேதப்படுத்துகின்றன.
இவ்வண்டு நீள்வட்ட வடிவத்தில், 2-3 மி.மீ. நீளத்துடன், இளம் காவி நிறத்தில் காணப்படும். இதன் இறக்கைகள் மிருதுவாக மிகச்சிறிய உரோமங்களுடன் இருக்கும். இதன் உணர் கொம்புகள் அரம் போன்ற அமைப்பைக் கொண்டது. இதன் வாழ்க்கைப் பருவம் 25 முதல் 30 நாட்களாகும்.
மேலாண்மை முறைகள்
விதை முட்டைகளைத் தரையில் வைக்காது கட்டைகள் மற்றும் மூங்கில் பாய்களின் மீது அடுக்க வேண்டும். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டு, பரிந்துரை செய்யப்படுகின்ற குழாய் வடிவ பொறிகளையும், ஊதாக்கதிர் விளக்குப் பொறிகளையும் பயன்படுத்தி புகையிலை வண்டுகளைக் கட்டுப்படுத்தலாம்.
|