பயிர் பாதுகாப்பு :: ஆமணக்கு பயிரைத் தாக்கும் பூச்சிகள் |
ஆமணக்குசுருள் பூச்சி, லைரோமைசா ட்ரைபோலி |
அறிகுறிகள் |
அடையாளம் |
கட்டுப்பாடு |
ஆமணக்கு காவடிப்புழு, அக்கேயா ஜனதா |
அறிகுறிகள் |
அடையாளம் |
கட்டுப்பாடு |
மெல்ல நகரும் பூச்சி, பாரஸா லெபிடா |
அறிகுறிகள் |
அடையாளம் |
கட்டுப்பாடு |
ரோமப்புழு, யூப்ராக்டிஸ் ஃபிராட்டெர்னா |
அறிகுறிகள் |
அடையாளம் |
கட்டுப்பாடு |
கம்பளி ரோம புழு , பெரிகாலியா |
அறிகுறிகள் |
அடையாளம் |
கட்டுப்பாடு |
ஆமணக்கு முட்புழு, ஏர்கோலிஸ் மெரியோன் |
அறிகுறிகள் |
அடையாளம் |
கட்டுப்பாடு |
சிகப்பு ரோமப்புழு, அமாஸ்க்டா அல்பிஸ்ட்ரைக்கா |
அறிகுறிகள் |
அடையாளம் |
கட்டுப்பாடு |
புகையிலை புழு, ஸ்போடாப்டிரா லிட்டுரா |
அறிகுறிகள் |
அடையாளம் |
கட்டுப்பாடு |
பீகார் ரோமப்புழு, ஸ்பைலோசோமா ஆப்ளிகுவா |
அறிகுறிகள் |
அடையாளம் |
கட்டுப்பாடு |
தண்டு மற்றும் காய்த்துளைப்பான், கொனாகெத்தஸ் பங்க்டிஃபெரர்லிஸ் |
அறிகுறிகள் |
அடையாளம் |
கட்டுப்பாடு |
தத்துப்பூச்சி, எம்போஸ்கா பிலோவெசன்ஸ் |
அறிகுறிகள் |
அடையாளம் |
கட்டுப்பாடு |
வெள்ளை ஈ, ட்ரை அலிரோடஸ் ரிசினி |
அறிகுறிகள் |
அடையாளம் |
கட்டுப்பாடு |
இலைப்பேன், ரெட்டிதிரிப்ஸ் ஸிரியகஸ்; ஸிரியோதிரிப்ஸ் டார்சாலிஸ் |
அறிகுறிகள் |
அடையாளம் |
கட்டுப்பாடு |
|
1. ஆமணக்கு சுருள் பூச்சி , லைரோமைசா ட்ரைபோலி |
தாக்குதலின் அறிகுறிகள்
- புழு இலையை உண்டு சேதம் பண்ணும்.
- பாதிக்கப்பட்ட இலைகள் காய்ந்து இறுதியில் கீழே விழுந்துவிடும்.
கட்டுப்படுத்தும் முறை
- வேப்பங்கொட்டை சாறு 5 சதம் (அ) ட்ரைகோபாஸ் 2.5 மிலி மருந்தை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.
|
பூச்சியின் அடையாளம்
- புழு - சிறியதாக, ஆரஞ்சு கலந்த மஞ்சள் நிறத்திலிருக்கும், தலை கிடையாது.
- சுருள் பூச்சி - மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
|
|
2. ஆமணக்கு காவடிப்புழு, அக்கேயா ஜனதா |
பூச்சியின் அடையாளம்
- வளர்ச்சியடைந்த புழு கருமை நிற தலையைக் கொண்டிருக்கும். உடலின் மேற்பரப்பில் சிகப்புநிற புள்ளிகள் காணப்படும்.
- அந்துப்பூச்சி சிகப்பு கலந்த பழுப்பு நிறத்திலிருக்கும். இரண்டு இறக்கையிலும் பெரிய திட்டுகளும் மூன்று கரும்புள்ளிகளும் காணப்படும்.
|
தாக்குதலின் அறிகுறிகள்
- புழு இலையை உண்டு சேதம் பண்ணும்.
கட்டுப்படுத்தும் முறை
- கைகளினால் புழுக்களை சேகரித்து அழிக்கலாம்.
- வேப்பம்சாறு கொட்டை 5 சதம் தெளித்து காவடிப் புழுவின் முட்டை மற்றும் புழு பருவத்தை அழிக்கலாம்.
- ட்ரைக்கோகிரைமா என்ற முட்டை ஒட்டுண்ணியை எக்டர்க்கு 50,000 வெளியிட்டு காவடிப்புழுவின் முட்டை குவியலை அழிக்கலாம்.
- குவினால்பாஸ் அல்லது குளோர்பைரிபாஸ் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றினை 2 மிலி மருந்தை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.
- பறவை இருக்கையை ஏக்கர்க்கு 10 வீதம் அமைத்து காவடிப்புழுவின் தாக்குதலைத் தவிர்க்கலாம்.
|
|
3. மெல்ல நகரும் பூச்சி, பாரஸா லெபிடா |
தாக்குதலின் அறிகுறிகள்:
- புழு கலைகளை தொடர்ச்சியாக உண்டு சேதப்படுத்துகிறது.
- இறுதியாக செடி முழுவதும் பரவி சேதத்தை ஏற்படுத்துகிறது.
கட்டுப்படுத்தும் முறை:
-
கைகளினால் புழுவை சேகரித்து அழிக்கலாம்.
- குளோர்பைரிபாஸ் 2 மிலி மருந்து 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்து அந்துப்பூச்சியின் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.
|
பூச்சியின் அடையாளம்
- புழு - பச்சை நிறத்தில் இருக்கும். உடலின் மேல்பகுதியில் வெள்ளை நிறகோடும், கருப்பு அல்லது சிகப்பு நிறங்களில் கொத்து கொத்தாக முடிகளும் காணப்படும்.
|
|
4. ரோமப்புழு, யூப்ராக்டிஸ் ஃபிராட்டெர்னா |
தாக்குதலின் அறிகுறிகள்
- புழுக்கள் இலையைத் தின்று சேதப்படுத்தும்.
பூச்சியின் அடையாளம்
- யூப்ராக்டிஸ் ஃபிராட்டெர்னா
- போர்த்தீசியா சின்ட்டிலான்ஸ்
கட்டுப்படுத்தும் முறை:
- ஆரம்ப நிலையில் ரோமப்புழுவின் தாக்குதலைக் கட்டுப்படுத்த வேப்பம்சாறு கொட்டை 5 சதம் தெளிக்கவும்.
- குளோர்பைரிபரஸ் அல்லது மோனோகுரோட்டாபாஸ் 2 மிலி மருந்தை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.
|
|
5. கம்பளி ரோம புழு , பெரிகாலியா |
தாக்குதலின் அறிகுறிகள்
- புழு இலையைத் தின்று சேதத்தை ஏற்படுத்தும்.
பூச்சியின் அடையாளம்
- புழு - கருமை நிறமுடையது, தலை பழுப்பு நிறத்திலும் நீளமான பழுப்புநிற முடியையும் கொண்டிருக்கும்.
- அந்துப்பூச்சி - பழுப்பு நிறத்திலிருக்கும் பின் இறக்கை இளம்சிவப்பாகவும் கருமை நிற புள்ளியைக் கொண்டிருக்கும்.
கட்டுப்படுத்தும் முறை
- ஆரம்ப நிலையில் ரோமப்புழுவின் தாக்குதலைக் கட்டுப்படுத்த வேப்பம்சாறு கொட்டை 5 சதம் தெளிக்கவும்.
- குளோர்பைரிபாஸ் அல்லது மோனோகுரோட்டபாஸ் 2 மிலி மருந்தை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.
|
|
6. ஆமணக்கு முட்புழு, ஏர்கோலிஸ் மெரியோன் |
தாக்குதலின் அறிகுறிகள்:
- முட்புழு இலையைத் தின்று சேதப்படுத்தும்
பூச்சியின் அடையாளம்:
- புழு - பச்சை நிறத்திலிருக்கும், உடல் முழுவதும் கொத்து கொத்தாக பிளவுபட்ட ரோமங்கள் காணப்படும்.
- அந்துப்பூச்சி - பழுப்பு வண்ணத்துடன் இறக்கைகளின் குறுக்காக அலை அலையால் வளைந்த கோடுகள் காணப்படும்
கட்டுப்படுத்தும் முறை:
- ஆரம்ப நிலையில் ரோமப்புழுவின் தாக்குதலைக் கட்டுப்படுத்த வேப்பம் சாறு கொட்டை 5 சதம் தெளிக்கவும்
- குளோர்பைரிபரஸ் அல்லது மோனோகுரோட்டாபாஸ் 2 மிலி மருந்தை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்
|
|
7. சிகப்பு ரோமப்புழு, அமாஸ்க்டா அல்பிஸ்ட்ரைக்கா |
தாக்குதலின் அறிகுறிகள்
- ரோமப்புழு இலையின் அடிப்பகுதியில் காணப்படும்.
- இலையைச் சுரண்டி பச்சையத்தை உண்ணும்.
- நன்கு வளர்ச்சியடைந்த புழு நரம்புபகுதியை மட்டும் விட்டுவிட்டு இடைப்பட்ட பகுதிகளை உண்டு சேதப்படுத்துகிறது.
பூச்சியின் அடையாளம்:
- புழு - பழுப்பு நிறத்திலிருக்கும், உடலின் மேற்பரப்பில் நீளமான சிகப்பு கலந்த பழுப்புநிற முடிகள் உண்டு சேதப்படுத்துகிறது
- அந்துப்பூச்சி - அந்துப்பூச்சி வெண்ணிற இறக்கைகளைக் கொண்டிருக்கும்
|
கட்டுப்படுத்தும் முறை
- முட்டைக்குவியலை சேகரித்து அழிக்கலாம்.
- கைகளினால் ரோமப்புழுவை சேகரித்து அழிக்கலாம்.
- கோடைக் காலத்தில் நிலத்தை உழவு செய்து அந்துப்பூச்சியின் கூட்டுப்புழுக்களை அழிக்கலாம்.
- விளக்கு பொறி அமைத்து அந்துப்பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம்.
- காட்டாமணக்கு அல்லது ஐபோமியா ஆகியவற்றை கவர்ச்சிப் பயிராக அமைத்தால் ரோமப்புழு இடம்விட்டு இடம் செல்வதைத் தவிர்க்கலாம்.
- கார்பரில் அல்லது குயினால்பாஸ் இவற்றில் ஏதேனும் ஒரு தூளை எக்டர்க்கு 25 - 30 கிலோ வீதம் தூவி இளம் ரோமப்புழுவைக் கட்டுப்படுத்தலாம்.
- டைகுளோரோபாஸ் 200 மிலி மருந்தை 400 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்தால் வளர்ச்சியடைந்த ரோமப் புழுவின் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.
- டைமீத்தேயேட், (அ) மோனோகுரோட்டாபாஸ் 2 மிலி மருந்தை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.
- நச்சு உணவை அமைத்து (10 கிலோ அரிசிதவுடு + 1 கிலோ பனங்கட்டி + 1 லிட்டர் குயினால்பாஸ்) அந்துப்பூச்சியை அழிக்கலாம்.
|
|
8. புகையிலை புழு, ஸ்போடாப்டிரா லிட்டுரா |
தாக்குதலின் அறிகுறிகள்
- வளர்ச்சியடைந்த புழு இலையைத் தின்று சேதப்படுத்தும்.
- சேதம் அதிகமாகும் நிலையில் புழு கணு மற்றும் கிளைகளைத் தவிர அனைத்து பாகங்களையும் தின்று சேதப்படுத்தும்.
கட்டுப்படுத்தும் முறை:
- ஆரம்ப நிலையில் முட்டைக்குவியலையும், புழுக்களையும் கைகளால் சேகரித்து அழிக்கலாம்.
- கோடைக்காலங்களில் நிலத்தை உழவு செய்து அந்துப்பூச்சியின் கூட்டுப்புழுக்களை அழிக்கலாம்.
- இனக்கவர்ச்சி பெரறியை ஏக்கர்க்கு 4 - 5 வீதம் அமைத்து ஆண் அந்துப்பூச்சியை கவர்ந்து அழிக்கலாம்.
- வேப்பஞ்சாறுக்கொட்டை 5 சதம் அல்லது குளோர்பைரிபாஸ் 2.5மிலி அல்லது மோனோகுரோட்டாபாஸ் 2 மிலி மருந்து இவற்றில் ஏதேனும் ஒன்றினை தெளித்து இளம்புழுக்களின் தாக்குதலைத் தவிர்க்கலாம்.
- நச்சு உணவை (1 லிட்டர் மோனோகுரோட்டாபாஸ் (அ) 1 கிலோ கரர்பரில் தூள் + 10 கிலோ அரிசிதவிடு + 1 கிலோ பனங்கட்டி + 1 லிட்டர் தண்ணீர்) எக்டர்க்கு ஒன்று வீதம் அமைத்து வளர்ச்சியடைந்த புழுவை அழிக்கலாம்.
|
பூச்சியின் அடையாளம்:
- முட்டை - பெண் அந்துப்பூச்சி முட்டையை குவில்களாக இடும். முட்டை பழுப்புநிறத்திலிருக்கும்.
- புழு - இளம் பச்சை நிறத்திலும் கருமை நிறக்கோடுகள் உடலின் மேற்பரப்பில் காணப்படும்.
- அந்துப்பூச்சி - அந்துப்பூச்சியின் முன் இறக்கை பழுப்பு நிறத்தில் இருக்கும். வெள்ளை நிற கோடுகள் இறக்கையில் குறுக்கே காணப்படும். பின் இறக்கை வெள்ளை நிறத்திலும் இறக்கையின் ஓரத்தில் பழுப்புநிற திட்டுகள் காணப்படும்.
|
|
9. பீகார் ரோமப்புழு, ஸ்பைலோசோமா ஆப்ளிகுவா |
தாக்குதலின் அறிகுறிகள்
- முட்டையிலிருந்து வெளிவரும் புழு இலையின் அடிப்பகுதியை தொடர்ச்சியாக உண்டு சேதப்படுத்தும்.
பூச்சியின் அடையாளம்:
- முட்டை - பெண் அந்துப்பூச்சி இலைகளின் அடிப்புறத்தில் முட்டையைக் குவில்களாக இடும்.
- புழு - ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். உடலின் இரண்டு ஓரங்களிலும் மஞ்சள் நிற முடிகள் காணப்படும்
- அந்துப்பூச்சி - ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். முன் இறக்கை பழுப்பு நிறமாகவும் இரண்டு கரும்புள்ளிகளைக் கொண்டிருக்கும்
|
கட்டுப்படுத்தும் முறை
- முட்டைக் குவியலையும் இளம் புழுக்களையும் சேகரித்து அழிக்கலாம்.
- வேப்பங்கொட்டை சாறு 5 சதம் தெளித்து இளம் புழுக்களை அழிக்கலாம்.
- குயினால்பாஸ் அல்லது குளோர்பைரிபாஸ் 2 மிலி மருந்தை 1 லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளித்து வளர்ச்சியடைந்த புழுவை அழிக்கலாம்.
|
|
10. தண்டு மற்றும் காய்த்துளைப்பான், கொனாகெத்தஸ் பங்க்டிஃபெரர்லிஸ் |
தாக்குதலின் அறிகுறிகள்
- புழு பூக்கும் தருணத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தும்.
- புழுக்கள் காய்களையும், காயின் தண்டுகளையும் துளைத்து உட்சென்று தின்று அழிக்கும்.
- புழுக்கள் காய்களின் இடைப்பட்ட பகுதியில் நூலாம்படையின் அடிப்பரப்பில் இருந்து சேதத்தை ஏற்படுத்தும்.
பூச்சியின் அடையாளம்:
- புழு - புழு இளம்பச்சை நிறத்தில் இருக்கும். புழுவின் மேற்பகுதி இளஞ்சிவப்பு நிறத்துடனும் மெல்லிய ரோமங்களுடனும் காணப்படும்
- அந்துப்பூச்சி - மஞ்சள் நிறமுடையது, முன் இறக்கையில் கரும்புள்ளிகள் காணப்படும்
|
|
|
கட்டுப்படுத்தும் முறை:
- தாக்கப்பட்ட காய்களையும், தண்டுகளையும் சேகரித்து அகற்றிவிட வேண்டும்.
- புரப்னோபாஸ் 1.5 மிலி அல்லது மோனோகுரோட்டோபாஸ் 2 மிலி மருந்தை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.
- பூக்கும் தருணத்தில் மருந்துத் தெளித்தல் அவசியம்.
|
|
11. தத்துப்பூச்சி, எம்போஸ்கா பிலோவெசன்ஸ் |
தாக்குதலின் அறிகுறிகள்:
- குஞ்சுகளும், வளர்ந்த பூச்சிகளும் இலைகளின் சாறை உறிஞ்சி சேதப்படுத்தும்.
- தாக்கப்பட்ட இலைகள் சேதம் அதிகமாகும் நிலையில் கருகி கீழே விழுந்துவிடும்.
பூச்சியின் அடையாளம்
- குஞ்சுகள் - பச்சை நிறத்தில் இருக்கும்
- தத்துப்பூச்சி - பச்சை நிறமுடையது
|
|
கட்டுப்படுத்தும் முறை
- இமிட்குளோரோபிட் (அ) கரர்போசல்பான் இவற்றில் ஏதேனும் ஒரு மருந்தினால் விதை நேர்த்தி செய்த பிறகு பயிரிடலாம்.
- மோனோகுரோட்டாபாஸ் மருந்தினை தண்டின் மேல் தெளிக்க வேண்டும்.
- டைமீதேயேட் 0.05 சதம் (அ) மோனோகுரோட்டபாஸ் 0.05 சதம் தெளித்து சாறு உறிஞ்சும் பூச்சிகளின் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.
|
|
12.வெள்ளை ஈ, ட்ரை அலிரோடஸ் ரிசினி |
தாக்குதலின் அறிகுறிகள்
- குஞ்சுகளும் வளர்ந்த பூச்சியும் இலைகளின் சாறை உறிஞ்சுகிறது.
- தேன்போன்ற திரவத்தை இலைகளில் மேற்பரப்பில் குஞ்சுகள் உண்டுபண்ணும்.
- தாக்கப்பட்ட இலைகள் கேப்னோடியம் பூஞ்சையினால் கவரப்பட்டு கருமை நிறமாக மாறிவிடும்.
- தாக்கப்பட்ட செடிகள் வள்ர்ச்சிக்குன்றி காணப்படும்.
பூச்சியின் அடையாளம்
- குஞ்சுகள் - மஞ்சள் நிறமாக இருக்கும்.
|
கட்டுப்படுத்தும் முறை
- மஞ்சள் கவர்ச்சி பொறி அமைத்து வெள்ளை ஈக்களைக் கவர்ந்து அழிக்கலாம்.
- ட்ரைசோபாஸ் 2.5 மிலி அல்லது அசப்பேட் 2 மிலி மருந்தை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.
- வேப்பங்சாறுக் கொட்டை 5 சதம் (அல்லது) வேப்பம் எண்ணெய் 3 சதம் இவற்றில் ஏதேனும் ஒன்றினைத் தெளித்து வெள்ளை ஈக்களின் எண்ணிக்கையைக் குறைக்கலாம்.
|
|
13. இலைப்பேன் ரெட்டிதிரிப்ஸ் ஸிரியகஸ்; ஸிரியோதிரிப்ஸ் டார்சாலிஸ் |
தாக்குதலின் அறிகுறிகள்
- குஞ்சுகளும், வளர்ந்த பூச்சிகளும் இலைகளின் சாறை உறிஞ்சி சேதப்படுத்தும்.
- தாக்கப்பட்ட இலைகளின் மேல் பகுதியில் மஞ்சள் நிறத் திட்டுகளும் கீழ் பகுதியில் பழுப்புநிறத் திட்டுகளும் காணப்படும்.
- சேதம் அதிகமாகும் போது தாக்கப்பட்ட இலைகள் சுருண்டு கருகிவிடும்.
பூச்சியின் அடையாளம்
- குஞ்சுகள் - இளம் சிவப்பு நிறத்தில் இருக்கும்
- செதில் பூச்சி - கருமை நிறமுடையது சீப்பு போன்ற முன் இறக்கையைக் கொண்டிருக்கும்.
|
கட்டுப்படுத்தும் முறை
- டைமீத்தேயேட் (அ) மெதில் டெமட்டான் (அ) மோனோகுரோட்டபாஸ் 2 மிலி மருந்தை 1 லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிக்கவும்.
- மோனோகுரோட்டபாஸ் 320 மிலி + வேப்பம் எண்ணெய் 1 லி + காதி தூள் 1 கிலோ ஆகியவற்றை 200 லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளித்து செதில்பூச்சியைக் கட்டுப்படுத்தலாம்.
|
|
|